பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்-04

1.thaenkaay enneyil majchalthoolai poadduk kulaiththu udampirku thadavi, payaththamaavai thaeyththuk kuliththaal thol palapalappaakavum, miruthuvaakavum irukkum. 2.aarajchu palaththai irandaaka veddi mukaththil thaeyththu, paththu nemidam kaliththu choappu poaddu kaluva vaendum. thinam ivvaaru cheythu vanthaal mukam palapalappaakavum, ilamaiyudanum irukkum. 3.mukaththil ulla thaevaiyarra mudikalai neekka adikkadi elumichchai chaarrai thadava vaendum. thinamum ivvaaru cheyvathaal mudi valarchchi kurainthu mukam alaku perum. 4.parumanaaka … Continue reading "penkalukkaana alakukkurippukal-04"
penkalukkaana alakukkurippukal-04

1.தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

2.ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

3.முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

4.பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

5.நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

Popular Post

Tips