வியாபாரத் வெற்றிகளை தரும் வில்வ அர்ச்சனை

choala valanaaddin chivath thalankalil thiru irumpoolai ennum aalankudi kuruththalam, pandaiya kaalaththil poolai vanak kaadaaka irunthathu. atharku thenmaerkae 1 ki.mee. thooraththil poolaivana naththam enra pulavar naththamae thalainakaramaaka thikalnthathu. vankanaar enra chankap pulavar iththalaththin chirappai makkalukku velippaduththiyathaal appulavarin nenaivaaka pulavar naththam enru maruviyathu. poathuvaaka makkal cheykinra nallathu keddathu ullidda chakala kaariyankalukkum piramma thaevanaal padaikkappadda ashdathik paalakarkal chaadchiyaaka … Continue reading "viyaapaarath verrikalai tharum vilva archchanai"
viyaapaarath verrikalai tharum vilva archchanai

சோழ வளநாட்டின் சிவத் தலங்களில் திரு இரும்பூளை என்னும் ஆலங்குடி குருத்தலம், பண்டைய காலத்தில் பூளை வனக் காடாக இருந்தது. அதற்கு தென்மேற்கே 1 கி.மீ. தூரத்தில் பூளைவன நத்தம் என்ற புலவர் நத்தமே தலைநகரமாக திகழ்ந்தது. வங்கனார் என்ற சங்கப் புலவர் இத்தலத்தின் சிறப்பை மக்களுக்கு வெளிப்படுத்தியதால் அப்புலவரின் நினைவாக புலவர் நத்தம் என்று மருவியது. பொதுவாக மக்கள் செய்கின்ற நல்லது கெட்டது உள்ளிட்ட சகல காரியங்களுக்கும் பிரம்ம தேவனால் படைக்கப்பட்ட அஷ்டதிக் பாலகர்கள் சாட்சியாக இருக்கின்றனர். அவர்களில் நிருதி தேவனால் பூஜிக்கப்பட்ட ஈசன்தான் இங்கு எழுந்தருளியுள்ளார்.

ஆதியில் சிவபெருமான் ஆலகால விஷம் உண்டபோது திருமால், பிரம்மன், இந்திரன் மற்றும் அஷ்டதிக் பாலகர்கள் அனைவரும் தங்கள் தொழிலை மறந்தனர். பின்பு சிவபெருமானின் கட்டளைப்படி அஷ்டதிக் பாலகர்கள் ஆலங்குடி க்ஷேத்திரத்திற்கு கிழக்கில் இந்திரனால் இந்திர தீர்த்தமும் தென்கிழக்கில் பூனாயிருப்பு கிராமத்தில் அக்கினி தேவனால் அக்கினி தீர்த்தமும் தெற்கில் நரிக்குடி கிராமத்தில் யம தேவனால் யம தீர்த்தமும் மேற்கில் பூந்தோட்டம் கிராமத்தில் வருண தேவனால் வருண தீர்த்தமும் வடமேற்கில் மருதூர் கிராமத்தில் வாயு தேவனால் வாயு தீர்த்தமும் வடக்கில் கீழ அமராவதி கிராமத்தில் குபேர தேவனால் குபேர தீர்த்தமும் வடகிழக்கில் சித்தன்வாழூர் கிராமத்தில் ஈசான்ய தேவனால் ஈசான்ய தீர்த்தமும் நிறுவப்பட்டு அந்தந்த திக்குகளில் அவர்களாலேயே சிவலிங்க பிரதிஷ்டையும் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் நிருதி பாகமான புலவர் நத்தம் கிராமத்தில் நிருதி தேவன் நிருதி தீர்த்தம் உருவாக்கி, நிருதீஸ்வரர் என்ற திருநாமத்தில் லிங்க பிரதிஷ்டையும் செய்து பூஜித்தான். தான் மறந்துபோன தொழிலை மீண்டும் இத்தலத்தில்தான் பெற்றான். பல்வேறு சூட்சுமங்கள் நிறைந்த இந்த தலத்தை சங்கப் புலவர்கள், மகான்கள், சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் போன்றோர் வழிபட்டிருக்கின்றனர். கலியுகத்தில் தர்மத்தை நிலை நாட்ட இங்கு தர்ம வடிவாகவே அம்பாள் தர்மசம்வர்த்தினியாக எழிற் கோலத்தில் வீற்றிருந்து சகல மங்கலங்களையும் அருள்கிறாள்.

இந்த ஆலயத்தில் கணபதியும் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானும் அருளாசி வழங்குகிறார்கள். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். நாகர் தனியாக அமர்ந்து நாகதோஷம் போக்குகிறார். நிருதி திக்குக்குரிய குரோதன பைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இங்கு பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு, இறைவனை பல வண்ண மலர்களாலும் வில்வத்தாலும் அர்ச்சனை செய்து ஐந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தொழில், வியாபாரம் தடை நீங்கி அபிவிருத்தி அடையலாம். சமீபத்தில்தான் இந்தக் கோயில் கும்பாபிஷேகம் கண்டிருக்கிறது. 

Popular Post

Tips