பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்-05

1.koonthalil enney pachai athikamaaka irunthaal, koali muddaiyil kojcham charkkaraiyai kalanthu thalaiyil laechaaka thadavikkondu piraku thalaikku oorra vaendum. ithanaal enney pachai neenki mudi alaku perum. 2.thaeneeril vadikaddiya pin, mijchum thaeyilaith thoolil elumichchai chaarai pilinthu, thalaiyil thaeyththuk kuliththaal, thalaimudi palapalappaakum. 3.vaeppilai, puthinaa, chirithu maruthaane marrum kuppaimaene ilaikalai kaayavaiththu, thoolaakki vaiththuk kollavum. ithil chirithu eduththu, paalil kulaiththu, mukaththil … Continue reading "penkalukkaana alakukkurippukal-05"
penkalukkaana alakukkurippukal-05

1.கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

2.தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

3.வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

4.இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

5.கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

Popular Post

Tips