இறைவன் எப்படி வாரி வழங்குகிறானோ அதுபோல நீங்களும் கொடுத்து வாழுங்கள்.

pakthi, thiyaanam, olukkam moonraalum oruvan theyveeka janaththai adaiya mudiyum. vaaymai ennum adiththalaththin meethu ippanpukal amaiyumpoathu, kadavulai oruvan uruthiyaaka adainthu viduvaan.   ulaka vaalvu nerantharamaanathu ennum ariyaamai akanru viddaal paavam vilakividum. paavam neenkinaal aachai, chuyanalam marrum anaiththu thuyarankalum nammai viddu kaanaamal poakum.   eppoathum koduppavanaaka irukkap palakunkal. anpu, uthavi, nallannam, karunai ivarraip pirarukkuk koduththu makilunkal. pathilukku … Continue reading "iraivan eppadi vaari valankukiraanoo athupoala neenkalum koduththu vaalunkal."
iraivan eppadi vaari valankukiraanoo athupoala neenkalum koduththu vaalunkal.
பக்தி, தியானம், ஒழுக்கம் மூன்றாலும் ஒருவன் தெய்வீக ஞானத்தை அடைய முடியும். வாய்மை என்னும் அடித்தளத்தின் மீது இப்பண்புகள் அமையும்போது, கடவுளை ஒருவன் உறுதியாக அடைந்து விடுவான்.

  உலக வாழ்வு நிரந்தரமானது என்னும் அறியாமை அகன்று விட்டால் பாவம் விலகிவிடும். பாவம் நீங்கினால் ஆசை, சுயநலம் மற்றும் அனைத்து துயரங்களும் நம்மை விட்டு காணாமல் போகும்.

  எப்போதும் கொடுப்பவனாக இருக்கப் பழகுங்கள். அன்பு, உதவி, நல்லெண்ணம், கருணை இவற்றைப் பிறருக்குக் கொடுத்து மகிழுங்கள். பதிலுக்கு பிறரிடமிருந்து எதையும் எதிர்பாராதீர்கள். இறைவன் எப்படி வாரி வழங்குகிறானோ அதுபோல நீங்களும் கொடுத்து வாழுங்கள்.

 

மனித வாழ்வில் கடமைகள் துரத்துவதும், வருத்துவதும் உண்மையே. வாழ்வில் சுகங்களும் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஏற்ற குறிக்கோளை மறக்காமல், இருளிலும் ஞான ஒளியை ஏந்திக் கொண்டு முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் வந்தே தீரும்.

 

விவேகானந்தர்

 

Popular Post

Tips