பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்-08

1.thaenkaay enneyudan chirithu thaeyththaal thol miruthuvaakum.   2.aarajchup palath tholai chumaar oru vaaram varai neeril oora vaiththu antha echensai piridjil vaiththu athai thinamum thaeyththuk kuliththu vanthaal viyarvai vaadaiyae varaathu. tholum menmaiyaaka maarividum. 3.paathaam pavudar, aaliv enney, vaalaippalam aakiyavarrai kalanthu mukaththil thadavi 20 nemidam kaliththu kulirntha paalil mukaththai kaluvi thanneeril kaluva vaendum. 10 naadkal cheythaal mukam … Continue reading "penkalukkaana alakukkurippukal-08"
penkalukkaana alakukkurippukal-08

1.தேங்காய் எண்ணெயுடன் சிறிது தேய்த்தால் தோல் மிருதுவாகும்.

 

2.ஆரஞ்சுப் பழத் தோலை சுமார் ஒரு வாரம் வரை நீரில் ஊற வைத்து அந்த எசென்ஸை பிரிட்ஜில் வைத்து அதை தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை வாடையே வராது. தோலும் மென்மையாக மாறிவிடும்.

3.பாதாம் பவுடர், ஆலிவ் எண்ணெய், வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த பாலில் முகத்தை கழுவி தண்ணீரில் கழுவ வேண்டும். 10 நாட்கள் செய்தால் முகம் தனி அழகு பெறும்.

4.சிறிது வெண்ணெய், பாதாம் பருப்பு ஒன்று, சிறிது எலுமிச்சை சாறு காலந்து நன்கு அரைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் பஞ்சை பாலில் நனைத்து அதை முகத்தைச் சுற்றி தடவி, பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும்.

5.வெள்ளரிக்காயை இடித்து சாறு எடுத்து சிறிது பாலுடன் கலந்து பஞ்சால் நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாகத் தேய்த்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் ஒளி பெறும்.

Popular Post

Tips