ஆண்களின் மேல் பெண்களுக்கு ஈர்ப்பு வருவதற்கான காரணங்கள்

penkalai aankal virumpuvathu iyalpae. appadi virumpum penkal thankalaal eerkkappada vaendum enru ennuvathum ovvooru aanen nenaivaakum. penkalai eppadi eerkka vaendum enpathai therinthu kolvathu ovvooru aanen kanavaakum. aanaal intha chanthosham anaivarukkum kidaippathillai. anaivarukkumae penkalai eerkkum udal thorram iruppathillai allavaa? aanaal oruchila kunaathichayankalai chaerththuk kondaal poathum, penkalai unkal pakkam paiththiyamaaka alaiya vidalaam. aakavae oru pennen moolaiyil unkalai pathiya … Continue reading "aankalin mael penkalukku eerppu varuvatharkaana kaaranankal"
aankalin mael penkalukku eerppu varuvatharkaana kaaranankal

பெண்களை ஆண்கள் விரும்புவது இயல்பே. அப்படி விரும்பும் பெண்கள் தங்களால் ஈர்க்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் ஒவ்வொரு ஆணின் நினைவாகும். பெண்களை எப்படி ஈர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது ஒவ்வொரு ஆணின் கனவாகும். ஆனால் இந்த சந்தோஷம் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

அனைவருக்குமே பெண்களை ஈர்க்கும் உடல் தோற்றம் இருப்பதில்லை அல்லவா? ஆனால் ஒருசில குணாதிசயங்களை சேர்த்துக் கொண்டால் போதும், பெண்களை உங்கள் பக்கம் பைத்தியமாக அலைய விடலாம். ஆகவே ஒரு பெண்ணின் மூளையில் உங்களை பதிய வைத்து, கடைசியாக அவள் இதயத்தில் உங்களுக்கு இடம் கிடைக்க என்ன வழி என்பதை தமிழ் போல்ட் ஸ்கை ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி பெண்களை உங்கள் பின்னால் அலைய விடுங்கள்.

உங்களின் தனித்திறன்

நீங்கள் கிட்டார் வாசிப்பதில் வல்லவரா? சமைப்பதில் சிறந்தவரா? அல்லது புகைப்படம் எடுப்பதில் கில்லாடியா? இப்படி எந்த ஒரு தனித்திறன் உங்களிடம் இருந்தாலும் சரி, அதன் மேல் நீங்கள் வைத்திருக்கும் ஈடுபாடு மற்றும் உங்கள் ஆற்றலை கண்டு பெண்கள் கண்டிப்பாக உங்களை விரும்புவார்கள்.
ஆகவே உங்கள் தனித்திறனை நல்ல விதமாக பயன்படுத்துங்கள். அதிலும் அவர்களுக்காக கிட்டார் வாசியுங்கள், சமையுங்கள் அல்லது உங்கள் திறமையை வெளிப்படுத்தும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, அதை அவர்களுக்காக திறம்பட செய்யுங்கள். அதற்கு காரணம் என்னவோ தெரியவில்லை, தனித்திறன் உடைய ஆண்களிடம் பெண்கள் கவரப்படுகின்றனர்.

சிந்தனை

பரிசுகளோ, அக்கறையோ, பெண்களுக்கு ஏன் அதில் நாட்டம் இருக்கிறது? நீங்கள் 24 மணி நேரமும் அவர்களை பற்றி தான் சிந்தித்து கொண்டே இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு அது வெளிக்காட்டும். அந்த உணர்வு தான் அவர்கள் எதிர்பார்ப்பது. அதற்காக கண்ணை கவரும் பரிசுகளோ, விலை உயர்ந்த பரிசுகளோ வாங்க வேண்டிய அவசியமில்லை.

மாறாக ‘உன்னை பற்றி தான் இன்று முழுவதும் நினைத்து கொண்டே இருந்தேன்’ அல்லது ‘இன்று நீ பூசியுள்ள லிப்ஸ்டிக் வண்ணம் உன் அழகை இன்னும் அதிகரித்துள்ளது’ என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் நினைவில் அவர்கள் இருக்கிறார்கள், அவர்களை பற்றிய சிறு விஷயத்தை கூட நீங்கள் கவனிக்கிறீர்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு போதுமானது. இது போதும் அவர்கள் இதயம் உங்களுக்காக துடிப்பதற்கு.

அவர்களை சிரிக்க வையுங்கள்

நகைச்சுவையாக பேசுவது என்பது ஒரு அறிய குணமாகும். அது அனைவருக்கும் வந்து விடாது. அது உங்களின் அறிவாற்றலையும், சமயோசித புத்தியையும் வெளிக்காட்டும். வளமையான நகைச்சுவை உணர்வு கொண்டவர், தன்னை பார்த்து சிரித்து, கஷ்ட காலத்தில் கூட அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு கொண்டவரை பார்த்தால், பெண்கள் விரைவிலேயே ஈர்க்கப்பட்டு விடுவார்கள்.

அழகிய புன்னகை

நம் அனைவரின் ரசனையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான உடல் அமைப்பு மற்றும் அளவை கொண்ட எதிர்பாலினத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் பொதுவான ஒரு விஷயத்தை ஒரு ஆணிடம் ஒரு பெண் எதிர்பார்க்கிறாள் என்றால், அது அவளை மயக்கும் அவனது புன்னகை தான். அதிலும் நீங்கள் சந்தோஷமாக மற்றும் குதூகலமாக இருப்பதை உங்கள் புன்னகை மூலமாக தெரிந்து கொள்ளலாம். உங்கள் புன்னகை பெண்களின் மன கதவையும் திறக்கும். அழகிய பற்கள் இருந்தால், அது கூடுதல் பலனை அளிக்கும். மேலும் இது உங்களை நீங்கள் நல்லபடியாக பராமரிக்கிறீர்கள் என்பதை பெண்களுக்கு எடுத்துரைக்கும்..

ரொமான்டிக் உணர்வுடன் இருங்கள்

காதல் உணர்வு என்பது உடலுறவை விட மேலான ஒன்று. அதிலும் பூக்கள் வாங்குவதை விட, மெழுகுவர்த்தி ஏற்றுவதை விட மேலான ஒன்றாகும். மேலும் இது ஒரு பெண்ணை மென்மையாக கையாண்டு, அவள் மீது நீங்கள் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக அமையும். ஒருவேளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட, அவர்களை பாராட்ட மறந்து விடாதீர்கள். மேலும் ஒரு குழந்தையை போல அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள். அது அவர்களை ஈர்க்கும்.

தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்

ஒரு பெண்ணிடம் ஆண் கவர்ச்சியாக காட்சி அளிக்க எது உதவுகிறது என்று தெரியுமா? அது அவர்களின் தன்னம்பிக்கை தான். தனக்கு வேண்டியதை அடைய எந்த ஆண் பயம் இல்லாமல் துணிவுடன் அணுகுகிறானோ, அவனிடம் பெண் காந்தம் போல் ஈர்க்கப்படுவாள். அப்படிப்பட்ட ஆணால், சந்தேகமே இல்லாமல் ஒரு பெண் ஈர்க்கப்படுவது நிச்சயம். அது அவளுக்கு பாதுகாப்பு உணர்வையும் அளிக்கும். ஆனால் தன்னம்பிக்கையை முரட்டுதனத்தோடு குழப்பி கொள்ளாதீர்கள். தன்னம்பிக்கை அவர்களை ஈர்க்கும் என்றால், முரட்டுத்தனம் அவர்களிடம் வெறுப்பை உண்டாக்கும்.

ஆளுமையுடன் இருங்கள்

உங்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டும். தன்னை அறியாமலேயே ஆளுமை நிறைந்த ஆண்களால் பெண் ஈர்க்கப்படுகிறாள். அதற்காக முரட்டுத்தனத்துடன் அடக்குமுறையை கையாளக்கூடாது. அது நீங்கள் நினைத்ததற்கு மாறாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆகவே இதனை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். குறிப்பாக உங்கள் ஆளுமையில் ஒரு பண்பு இருக்க வேண்டும். அதை பக்குவமாக கையாண்டால் நீங்கள் தான் ராஜா!

Popular Post

Tips