சாம்பார்

thaevaiyaana poarudkal : thuvaramparuppu – 200 kiraam (4paerukku) thakkaali – 3 venkaayam – 2 periyathu allathu 8 chiriyathu puli – elumichchampalam alavu chakthi machaalaa chaampaar poadi – 4 spoon kaduku, ulunthamparuppu – 1/2 spoon enney, uppu, karuvaeppilai, koththamalli – thaevaiyaana alavu cheymurai : muthalil paruppaik kaluvi kukkar allathu paaththiraththil nanku vaekavaikkavum. kukkar enraal iru madanku … Continue reading "chaampaar"
chaampaar

Sambar

தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு – 200 கிராம் (4பேருக்கு)
தக்காளி – 3
வெங்காயம் – 2 பெரியது அல்லது 8 சிறியது
புளி – எலுமிச்சம்பழம் அளவு
சக்தி மசாலா சாம்பார் பொடி – 4 ஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பருப்பைக் கழுவி குக்கர் அல்லது பாத்திரத்தில் நன்கு வேகவைக்கவும். குக்கர் என்றால் இரு மடங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் அடிக்கும் வரை அடுப்பில் வேகவைக்கவும். பாத்திரம் என்றால் கையில் எடுத்துப் பார்த்து பருப்பு வெந்துவிட்டதா எனப் பார்த்துக் கொள்ளவும். கை சுட்டுக்கும் எனவே சுட்ட கையை நல்ல குளிர்ந்த நீரில் கழுவவும். பருப்பு வேகும் நேரத்தில் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வாணலியை(வானொலி அல்ல) அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு மீண்டும் வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சக்தி சாம்பார் பொடியைப் போட்டு மறுபடியும் வதக்கவும். தேவையெனில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அடுப்பில் தீயைக் குறைத்து வைத்துவிட்டு வேகவைத்த பருப்பையும், புளிக்கரைசலையும் வாணலியில் ஊற்றவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

சாம்பார் தயார்.

Popular Post

Tips