எத்தனையோ பொய்கள்..

nool: eththanaiyoa poaykal   aachiriyar : vithyaachaakar   aayvu : kavijar munu.chivachankaran     intha kavithai puththakaththin pin addaiyai padikkum vaachakar ithayam than akaththai puraththil kaaddum kavijar vithyaachaakarin eluththaanmaiyaal kavarappadukirathu. puththakam vaachiththal enpathai aetho moodappalakkamaay karuthi chinnaththiraimun thannai oppu koduththuviddu cheeraliyum intha chamookaththin meethu than muthal kavithaiyilaeyae thaarkkuchchi chularrukiraar.   eluththodu vaalkkai irandara kalanthuvidda ivarin ennankalukkum cheyalkalukkum idaiveli illaa nelaiyil … Continue reading "eththanaiyoa poaykal.."
eththanaiyoa poaykal..
நூல்: எத்தனையோ பொய்கள்

 

ஆசிரியர் : வித்யாசாகர்

 

ஆய்வு : கவிஞர் முனு.சிவசங்கரன்

 

  ந்த கவிதை புத்தகத்தின் பின் அட்டையை படிக்கும் வாசகர் இதயம் தன் அகத்தை புறத்தில் காட்டும் கவிஞர் வித்யாசாகரின் எழுத்தான்மையால் கவரப்படுகிறது.

புத்தகம் வாசித்தல் என்பதை ஏதோ மூடப்பழக்கமாய் கருதி
சின்னத்திரைமுன் தன்னை ஒப்பு கொடுத்துவிட்டு சீரழியும் இந்த சமூகத்தின் மீது தன் முதல் கவிதையிலேயே தார்க்குச்சி சுழற்றுகிறார்.

 

எழுத்தோடு வாழ்க்கை இரண்டற கலந்துவிட்ட இவரின் எண்ணங்களுக்கும்
செயல்களுக்கும் இடைவெளி இல்லா நிலையில் எழுத்துக்களில் இருந்து
இவரை பிரித்தெடுப்பது என்பது இயலாத செயல்.

 

தன்னைத்தானே விலாசிக்கொள்ளும்
ஒரு கழைக்கூத்தாடியின் படீர் படீரேனும் சாட்டை சப்தம்
இவர் கவிதைகளில் கேட்க நேரிடுகிறது.

 

உடல் எரிக்கும்
நெருப்பிற்கு
உள்ளமே விரகாகிறது
இந்த வரிகள்; போதி மரத்தின் வேர் ஒன்றாக
நம்மோடு புலனடக்கம் பேசுகிறது.

 

வழிக்க வழிக்க
முளைக்கிறது
தாடியும் ஜாதியும்

 

மனதில் முளைவிட்டுகொண்டே இருக்கும் சாதீய உணர்வுகளை
மழித்துக்கொண்டே இருப்பது நம் அன்றாட கடமையென
தன் தாடி கவிதையில் கோடிட்டுக் காட்டுகிறார்.

 

வாங்குவோருக்கும் விற்போருக்கும் மத்தியில் இரும்புத்திரை விழுந்துவிட்ட இன்றைய சூப்பர் மார்கட்

 

கலாச்சாரத்தில் வணிகமயமாகிப் போன நம் சமூகத்தை நமது பண்டமாற்று வணிகத்தின் பழம்பெருமையை திரும்பி பார்க்க வைக்கிறது – இவரின் பழக்கூடைக்காரியின் கவிதை.

 

சார்புநிலை சமூக அரசியலை மனித நேயத்தோடு
சிந்திக்க தூண்டுகிறது இவரின் எத்தனையோ பொய்களின் ‘எத்தனையோ கவிதைகள்.

 

கடவுள் என்பது பெயர்ச்சொல் அல்ல
அது ஒரு வினைச்சொல் என்பார் நம் அறிஞர் ஒருவர். அதுபோல்
தனக்குள்ளாகவே தன்னைக் கடக்கும்; பகுத்தறிவு மிளிரும்; ஆண்மிக முயற்ச்சிகளை ஆங்காங்கே கவிதைகளால் கல்லில் செதுக்குகிறார்…!

 

காதல் கொப்பளிக்கும், கண்களால் அழகை ரசிக்கும் எந்த ஒரு இதயமும்
அந்த அழகை உள்வாங்கி பிரதிபலிக்கும் கண்ணாடியாய் மிளிரும் என்பதை
இவரின் பவுடர்பூச்சு கவிதை பண்போடு பகர்கிறது…!

 

காலக்காற்றில் கரையும் கற்பாறையில்
ஏதோ ஒரு வடிவத்தை நம் கண்கள் காண்பது போல்
இப்புத்தகத்தில் சுயம்புவாய் உருவேறி இவர் ஒரு சிறந்த கவிஞரென
நம்நெஞ்சில் அழியா சித்திரமாய் பதிந்து விடுகிறார்…கவிஞர் வித்யாசாகர்!

Popular Post

Tips