காதல் தோல்வி கவலையில் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கு

eppadi oruvarukku Kadhal cheyyum poathu cholla mudiyaatha alavil chanthosham kidaikkiratho, athai vida pala madanku athikamaaka Kadhal murivin poathu undaakum vali irukkum. athaeppoal Kadhal murivaal aerpadum valiyil irunthu, yaaraalum avvalavu elithil velivara mudiyaathu. aanaal manam vaiththaal, nechchayam athilirunthu meelalaam. atharku cheyya vaendiyathellaam vaalkkai ithodu mudinthuviddathu enru ennaamal, inemael thaan vaalkkaiyai nanraaka vaalnthu kaanpikka vaendum enra ennam … Continue reading "Kadhal tholvi kavalaiyil irukkum anpu ullankalukku"
Kadhal tholvi kavalaiyil irukkum anpu ullankalukku

எப்படி ஒருவருக்கு காதல் செய்யும் போது சொல்ல முடியாத அளவில் சந்தோஷம் கிடைக்கிறதோ, அதை விட பல மடங்கு அதிகமாக காதல் முறிவின் போது உண்டாகும் வலி இருக்கும்.

அதேப்போல் காதல் முறிவால் ஏற்படும் வலியில் இருந்து, யாராலும் அவ்வளவு எளிதில் வெளிவர முடியாது. ஆனால் மனம் வைத்தால், நிச்சயம் அதிலிருந்து மீளலாம்.

அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை இதோடு முடிந்துவிட்டது என்று எண்ணாமல், இனிமேல் தான் வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இன்னும் சிலவற்றை மனதில் கொண்டு நடக்க வேண்டும். இப்போது கடந்த காதல் வாழ்க்கையை மறப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதை மனதில் கொண்டு நடந்தால், நிச்சயம் காதல் முறிவில் இருந்து மீண்டு, எதிர்கால வாழ்க்கையை நோக்கி சந்தோஷமாக செல்லலாம். 

காதல் முறிந்ததும் முதலில் செய்ய வேண்டியது, எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறு இல்லாமல், நண்பர்களாக இருப்போம் என்று தொடர்பில் இருந்தால், மீண்டும் ஒன்று சேர்ந்து, எதிர்காலத்தில் சண்டை இன்னும் அதிகரித்து, அது பல தவறான முடிவுகளை எடுக்க வைத்துவிடும். எனவே ஒருமுறை ஒத்துவராது என்று மனதில் முடிவெடுத்து பிரிந்துவிட்டால், மீண்டும் தொடர்ப்பில் இருக்காதீர்கள்.

இல்லாவிட்டால், அது வலியை இன்னும் அதிகரிக்கும். * கடந்த கால வாழ்க்கை பற்றி ஞாபகமே வரக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டால், முதலில் இதுவரை இருவரும் ஒன்றாக சென்ற இடங்களுக்கு செல்லாதீர்கள். அதிலும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலோ அல்லது ஒரே காலேஜில் படித்தாலோ, சற்று கடினம் தான். இருப்பினும் அவர்களுக்கு என்று எப்போதும் நேரத்தை ஒதுக்கி பேசாதீர்கள்.

முடிந்தால், அவர்களது கண்களுக்கு படாமல் இருப்பது நல்லது.

காதல் முறிவின் வலியில் இருந்து மீள்வதற்கு, தனிமையை தவிர்த்து, ஏதேனும் ஒரு பழக்கத்தில் ஈடுபடுங்கள். அதற்காக பழக்கம் என்றதும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றை எண்ணாதீர்கள்.

பழக்கம் என்றால் ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுவது, நண்பர்களுடன் வெளியே செல்வது, ஏதேனும் வகுப்பில் சேர்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

 முக்கியமாக காதல் முறிவு ஏற்பட்டு பல வருடங்கள் ஆன பின்னர், ஒருவர் வந்து உங்களிடம் அவரது காதலை சொன்னால், அப்போது அவர்களிடம் பழைய காதலைப் பற்றி சொல்லியும், அவர் உங்கள் மீது காதல் கொண்டால், மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

குறிப்பாக, அடுத்த காதலை ஏற்கும் முன் யோசித்து, அவர்களுடன் நன்கு கலந்தாலோசித்து பின் முடிவெடுங்கள். இல்லாவிட்டால் இதுவும் பிரச்சனையில் முடிந்துவிடும்.

Popular Post

Tips