வரலட்சுமி விரதம்

anpu, amaithi, pukal, inpam, valimai aakiya intha chakthikal varaladchumiyin amchankal enavae varaladchumi viratham maerkollumpoathu nam vaalvil intha amchankal ellaam nerainthirukkum enpathu aitheekam. thulachi, enpathai poala arukampul meethu makaaladchumikku athika piriyam undu. aavane maathatha chukkilapadcha vellikkilamaiyil intha viratham anushdikkappadukirathu. anru chanthiyaakaala vaelaiyil intha viratham anushdikkappadukirathu. muthalil veeddai nanku chuththamaakak kaluvi maakkoalamiddu vilakkaerri veedaellaam vaachanai pukai nerampiyirukkachchapoayya … Continue reading "varaladchumi viratham"
varaladchumi viratham

lakshmiஅன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலட்சுமியின் அம்சங்கள் எனவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும்போது நம் வாழ்வில் இந்த அம்சங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். துளசி, என்பதை போல அருகம்புல் மீது மகாலட்சுமிக்கு அதிக பிரியம் உண்டு. ஆவணி மாதத சுக்கிலபட்ச வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று சந்தியாகால வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. முதலில் வீட்டை நன்கு சுத்தமாகக் கழுவி மாக்கோலமிட்டு விளக்கேற்றி வீடெல்லாம் வாசனை புகை நிரம்பியிருக்கச்சபொய்ய வேண்டும்.பின்னர் அழகான மண்டபம் அமைத்து அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி சுவற்றில் சித்திரமாகவோ அல்லது வெள்ளியிலான வரலட்சுமி முகத்தை அமைத்து பின்னர் அம்மனுக்கு தோடு , மூக்குத்தி, சங்கிலி, வளையல் போன்றவற்றை பூட்டி அலங்காரம் செய்ய வேண்டும்.. பின்னர் தாழம்பூ பின்னலிட்டு பூச்சூட்டி கலசம் வைத்துப் பூஜிக்க வேண்டும். கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும்.

கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும். அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாற்றி அம்பாளை கிழக்குமுகமாக எழுந்தருளச் செய்து வலது பக்கத்தில் அமர்ந்து மஞ்சள் சரடை கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். பின்னர் பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்பாளை ஆராதித்து மஞ்சள் சரடை வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் நிவேதனம் படைக்க வேண்டும். இனிப்பு, கொலுக்கட்டைகளை படைத்து பாத்யம், அர்க்கியம் முதலிய பதினாறு வகை உபசரணங்களை செய்து பூஜையில் கலந்துகொள்ள வந்திருப்பவர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்க வேண்டும். பிறகு விரதம் மேற்கொள்ளுபவர்கள் உண்ண வேண்டும். சாஸ்திரபடி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விநாயகர் பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்யவேண்டும்.எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும்.புத்திரபாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

Popular Post

Tips