தனியாக இருக்கும் பெண்களுக்கு இந்த எச்சரிக்கை தகவல்

 inraiya thalaimuraiyinarai athikam kavaruvathu aanlain varththakam. intha muraiyil oru poarulai vaankavo, athika vilaikku virkavo mudiyum. intha muraiyai payanpaduththikkondu pala idankalil kolai, kollai poanra champavankal nadakkinrana. ippadi kollai champavankalil eedupadupavarkal thankalai naakareekamaaka kaaddikkolvaarkal. muthalil avarkal paththirikkaiyil varum vilamparankalai chaekarippaarkal. athil chilar ‘thankal veeddil irukkum kaddilai, maejaiyai, kampyooddarai virka vaendum’ enru vilamparam cheythirukkippaarkal. athilae thankalathu chelpoan namparaiyum … Continue reading "thaneyaaka irukkum penkalukku intha echcharikkai thakaval"
thaneyaaka irukkum penkalukku intha echcharikkai thakaval

 இன்றைய தலைமுறையினரை அதிகம் கவருவது ஆன்லைன் வர்த்தகம். இந்த முறையில் ஒரு பொருளை வாங்கவோ, அதிக விலைக்கு விற்கவோ முடியும். இந்த முறையை பயன்படுத்திக்கொண்டு பல இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

இப்படி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தங்களை நாகரீகமாக காட்டிக்கொள்வார்கள். முதலில் அவர்கள் பத்திரிக்கையில் வரும் விளம்பரங்களை சேகரிப்பார்கள். அதில் சிலர் ‘தங்கள் வீட்டில் இருக்கும் கட்டிலை, மேஜையை, கம்ப்யூட்டரை விற்க வேண்டும்’ என்று விளம்பரம் செய்திருக்கிப்பார்கள்.

அதிலே தங்களது செல்போன் நம்பரையும் கொடுத்துவிடுகிப்பார்கள். அந்த நம்பர்களுக்கெல்லாம் போன் போட்டு அந்த பொருள் தங்களுக்கு தேவை என்று பேச்சை ஆரம்பிப்பார்கள். எதிர்முனையில் பேசுவது பெண் என்றால் தொடர்ந்து பேசி விலையை விசாரிப்பார்கள்.

பொருளை எப்போது பார்க்க வரவேண்டும் என்று கேட்பார்கள். நேரத்தை கேட்கும்போது அந்தப் பெண் வேலைக்கு போகிறவரா? வீட்டில் இருப்பவரா? என்றெல்லாம் தெரிந்துகொண்டு, ‘வந்து பார்க்கிறோம்’ என்று கூறிவிட்டு வைத்து விடுவார்கள். அடுத்து திடீரென்று இரவு ஒன்பது மணி வாக்கில் போன் செய்து, ‘இப்போதுதான் வேலை முடிந்து வீடு திரும்புகிறேன். இப்போது வந்தால் அந்த பொருளை பார்க்கலாமா?’ என்று கேட்பார்கள்.

பெரும்பாலான பெண்கள் உடனே ‘இப்போது வேண்டாம்.. இரவாகிவிட்டது..’ என்பார்கள். அதோடு பேச்சை நிறுத்தாத அவர்கள், எப்படியாவது சுற்றி வளைத்து பேசி வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள்.(இப்படி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டிற்கு எப்படி செல்ல வேண்டும்..? வேகமாக ‘வேலையை’ முடித்து விட்டு, மற்றவர்கள் கண்களில் படாமல் எப்படி தப்பவேண்டும்? என்று திட்டமிட்டு விடுவர்.

அவர்கள் முதலிலே தன்னை என்ஜினீயர் என்றோ! ஆர்க்கிடெக் என்றோ !அறிமுகப்படுத்திவிட்டு, மதிப்பு மிகுந்த நிறுவனத்தில் வேலைபார்ப்பதாகவும் காட்டி கொள்வார்கள்) அந்தப் பெண் இரவில் வரவேண்டாம் என்று சொன்னதும், நல்ல பிள்ளையாக, மறுநாள் வருவதாக சொல்வார்கள்.

மறுநாள் பெரும்பாலும் கணவர் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கோ- கல்லூரிக்கோ சென்ற பிறகு சுமார் 11 மணிக்கு மேல் திடீர் விசிட் அடிப்பார்கள். ஒருவன் அந்த பைக்கை ஸ்டார்ட் செய்து வைத்தபடி தயாராக கீழே சற்று தூரத்தில் நிற்பான். இன்னொருவன் அந்த வீட்டிற்குள், ‘கட்டிலை பார்க்கவேண்டும்.கம்ப்யூட்டரை பார்க்கவேண்டும் என்று நுழைவான்.

அவைகளைக் காட்ட வீட்டிற்குள் அனுமதிக்கவேண்டிய கட்டாயம் அந்த பெண்ணுக்கு ஏற்படும். முதலிலோ தான் பார்க்கும் வேலை பற்றி போனில் சொல்லிவிடுவதால் அதற்கு தேவையான உபகரணம் போல் காட்டிக்கொள்ள கையில் பளிச்சென்ற கவரில் ஏதாவது ஒன்றை சுற்றிவைத்திருப்பான்.

அது என்ன வென்று கேட்டால் தனது தொழில் உபகரணம் என்பான். ஆனால் அதில் கூர்மையான ஆயுதமோ, பலமான இரும்புகம்பியோ இருக்கும். திட்டமிட்டு அந்த நபர்களில் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துவிட்டாலே அந்த வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.

தேவைப்பட்டால் ஆயுதத்தை கையில் எடுப்பார்கள். காரியம் முடிந்ததும் கண் இமைக்கும் நேரத்தில் தப்பிவிடுவார்கள். பெண்களே இப்படி சில கோஷ்டிகள் உங்களை குறிவைத்து சுற்றிக் கொண்டிருக்கின்றன. நாலாயிரம் ரூபாய்க்கு ஒரு பழைய கட்டிலை விற்றுவிடலாம் என்ற நப்பாசையில் விலைமதிப்பற்ற உயிரையோ, உடைமையையோ இழந்துவிடாதீங்க….!

Popular Post

Tips