உங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா ?

namathu ennankal oru vitha kaantha alaikalin vadivam kondathu.avai eppoaluthum alai alaiyaaka velipaddukkondae irukkum,allathu veliyaerikkondae irukkum.nallathu nallapadiyaaka{vilaivu nanmai} theeyathu theeyapadiyaaka {vilaivu theemai}. naam makilchchiyaaka allathu choakamaaka irukkumpoathu namathu ennaththirkaerpa namathu enna alaikalum maarupadukinrathu.avai muthalil nammaith thaakki viddu piraku kaantha alaikalaaka veliyaerukinrathu.appadi veliyaerum antha kaantha alaikal nammai churri ulla choolalaiyum paathikkinrathu. chari muthalil intha muthal nelaiyai charru … Continue reading "unkalai anaivarukkum pidikka vaendumaa ?"
unkalai anaivarukkum pidikka vaendumaa ?

நமது எண்ணங்கள் ஒரு வித காந்த அலைகளின் வடிவம் கொண்டது.அவை எப்பொழுதும் அலை அலையாக வெளிபட்டுக்கொண்டே இருக்கும்,அல்லது வெளியேறிக்கொண்டே இருக்கும்.நல்லது நல்லபடியாக{விளைவு நன்மை} தீயது தீயபடியாக {விளைவு தீமை}.

நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது நமது எண்ணத்திற்கேற்ப நமது எண்ண அலைகளும் மாறுபடுகின்றது.அவை முதலில் நம்மைத் தாக்கி விட்டு பிறகு காந்த அலைகளாக வெளியேறுகின்றது.அப்படி வெளியேறும் அந்த காந்த அலைகள் நம்மை சுற்றி உள்ள சூழலையும் பாதிக்கின்றது.

சரி முதலில் இந்த முதல் நிலையை சற்று ஆராய்வோம்.நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது இந்த மனோ நிலை நம்மை முதலில் தாக்குகின்றது என்று சொன்னேன் அல்லவா.எப்படி என்று பார்போம் வாருங்கள்.

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ முதன் முதலில் காதல் வசப்படும்போது அவர்கள் எல்லை இல்லா ஆனந்தப் பரவசத்தில் இருப்பர்.அந்த ஆனந்தப் பரவசம் அவர்களை தாக்கும்.அதற்கான அடையாளங்களை முதலில் அவர்கள் முகத்தில் காணலாம்.முகம் மலர்ந்து இருக்கும்.உடலில் ஒரு சுறுசுறுப்பு தோன்றும்.தோற்றத்தில் ஒரு கம்பீரம் காட்சியளிக்கும்.உடை உடுத்துவதிலும்,தங்களை அலங்காரம் செய்வதிலும் மிகவும் முனைப்பாக இருப்பர்.சுருங்கச்சொன்னால் எதிலும் ஒரு மிடுக்கு இருக்கும்.இப்போது இவர்களின் மனம் நேர்மரையில் {POSITIVE} இருக்கின்றது என்று பொருள்.

பிறகு அந்த எண்ணம் சுற்று சூழலையும் பாதிக்கும் என்று சொன்னேன் அல்லவா.சந்தோசத்தில் மலர்ந்து முகம்,சுறுசுறுப்பான செய்கைகள்,அழகான உடை,கம்பீரமான தோற்றம்,அலங்காரம் செய்யப்பட்ட வசீகரிக்கப்பட்ட உடல் அமைப்பு.எதிலும் ஒரு மிடுக்கு.இவை அனைத்தும் காண்போர் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டவை.புதிய மணமக்களுக்கும் இது பொருந்தும்.சரி இந்த மாற்றம் அனைத்திற்கும் மூலப் பொருள் எது? முதலில் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான மனோ நிலைதான்.

இந்த மகிழ்ச்சியான மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன சூழல் நிகழும்,அதையும் சற்று பார்போம் வாருங்கள்.இந்த காதல் ஜோடிகள் ஏதோ ஒரு சந்தற்பத்தால் கட்டாயமாக பிறரால் பிரிக்கப் படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.அப்போது மகிழ்ச்சியில் இருந்த அவர்களின் மனோநிலை இப்போது மாலா துயரத்தில் ஆழ்ந்து விடும்.இதன் வெளிப்பாடு,முகத்தில் சோகம், செயலில் சுறுசுறுப்பு இன்மை,தன் சுய அலங்காரத்தை அலட்சியப் படுத்துவர்.சோகமே வடிவாக இருப்பர். அவர்களின் மனம் இப்போது எதிர்மறையில்{NEGATIVE} இருக்கும்.இப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளவர்கள் செய்கைகளையும்,வருகைகளையும்,தோற்றங்களையும் பிறர் விரும்புவதில்லை.சுருங்கச் சொன்னால் இவர்கள் எங்கும் அலையாத விருந்தாளியாக இருப்பர்.

கொஞ்சம் இங்கே கவனிக்கவும் அதே காதல் ஜோடிகளுக்கு தங்கள் மனோ நிலையில் மாற்றம் ஏற்பட்டதும்,அந்த மாற்றம் முதலில் அவர்களை பாதித்தது பிறகு அவர்களின் சுற்று சூழலையும் மாற்றி விட்டது.இவை ஒரு உதாரணாமாக இருந்தாலும்இதுதான் உண்மையினும் உண்மை.

“கரு-எண்ணத்தை கவனமுடன் கையாளுங்கள்”

!உங்களது மகிழ்ச்சியான எண்ணங்கள் உங்களுக்கு ஒரு வசீகரத் தோற்றதை தரவல்லது.
!உங்களது சோகமான எண்ணங்கள் பிறர் உங்களை வெறுக்கும் சூழலை தோற்றுவிக்க வல்லது.

மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
மனம் அது செம்மையானால் வாசியை அடக்க வேண்டாம்
மனம் அது செம்மையானால் வேதங்கள் ஓத வேண்டாம்
மனம் அது செம்மையானால் இறைவனை தேடித் திரியவேண்டாம்
“மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமலே அங்கு தெய்வம் வந்து சேரும்”
இவை அனைத்தையும் சொன்னவர் “திருமூலர்”

“MIND MOVES MATTER”
“மனம்தான் சூழ்நிலையை உருவாக்குகின்றது”

Popular Post

Tips