தொப்புளுக்கு வளையம் போடும் அழகியா நீங்கள் ஓர் எச்சரிக்கை

naakareekam enra peyaril pala viththiyaachamaana maarrankal thinamum vanthu kondu thaan irukkirathu. athil nanmaiyum theemaiyum charichamamaaka kalanthirukkirathu. chollappoanaal, avarril theemai thaan maeloanki nerkirathu. appadi valarnthu varum naakareekaththil onraaka vilankukirathu paadi piyarchin enappadum udampil thulaiyiduthal. nam chamookaththil udampil thulaiyiduthal enpathu oru mukkiya naakareekamaakavum, panpaadaakavum maari varukirathu. entha oru kaaranaththirkaaka irunthaalum, udampil thulaiyiduvathu enpathu periya mudivaakum. udampil thulaiyiduvathaal … Continue reading "thoppulukku valaiyam poadum alakiyaa neenkal oar echcharikkai"
thoppulukku valaiyam poadum alakiyaa neenkal oar echcharikkai

நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியாசமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திருக்கிறது. சொல்லப்போனால், அவற்றில் தீமை தான் மேலோங்கி நிற்கிறது. அப்படி வளர்ந்து வரும் நாகரீகத்தில் ஒன்றாக விளங்குகிறது பாடி பியர்சிங் எனப்படும் உடம்பில் துளையிடுதல்.

நம் சமூகத்தில் உடம்பில் துளையிடுதல் என்பது ஒரு முக்கிய நாகரீகமாகவும், பண்பாடாகவும் மாறி வருகிறது. எந்த ஒரு காரணத்திற்காக இருந்தாலும், உடம்பில் துளையிடுவது என்பது பெரிய முடிவாகும். உடம்பில் துளையிடுவதால் ஏற்படும் உடல்நல இடர்பாடுகள் என்னவென்று பார்ப்போம்…

தொற்று என்பது உடம்பில் துளையிடுவதால் ஏற்படும் பொதுவான பிரச்சனை. இதில் கவனம் செலுத்தவில்லை என்றாலோ அல்லது உரிய சிகிச்சையை சரியான காலத்தில் எடுக்கவில்லை என்றாலோ, தழும்பு ஏற்படுவதுடன் இரத்தம் நஞ்சாகிவிடும். அதிலும் சரிவர கவனம் செலுத்தாவிட்டால் அசிங்கமான தழும்பை உண்டாக்கிவிடும்.

குறிப்பாக தொற்றுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக ஒழுங்கில்லாமல் துளையிடுதல், துளையிட்டப் பின் சரியாக பராமரிக்காமல் போவது மற்றும் துளையிட்ட இடத்தில் பயன்படுத்தும் நகைகள் போன்றவை ஆகும்.

உலோகங்கள் உடலில் படும்போது சரும அலர்ஜி ஏற்படுவதற்கு அந்த உலோகங்களே காரணியாக விளங்குகிறது. அதனால் உடம்பில் துளையிடும் சில வகை அணிகலன்களால், இவ்வகை அலர்ஜிகள் ஏற்படுவதுண்டு. மேலும் இத்தகைய அலர்ஜிகள் சுவாசப் பிரச்சனை, சொறி மற்றும் துளையிட்ட இடத்தில் வீக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

சில நேரம் அலர்ஜி தீவிரமடைந்தால் அது அதிர்ச்சியை ஏற்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்யும். ஒழுங்காக துளையிடவில்லை என்றாலோ அல்லது துளையிட்ட இடத்தில் குத்தப்படும் அணிகலன் சரியாக குத்தப்படவில்லை என்றாலோ நரம்பு சிதைவு ஏற்படும்.

அதிலும் தவறான இடத்தில் துளையிட்டால், அங்குள்ள நரம்பையும் சேர்த்து துளையிட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாது துளையிட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களும் நிரந்தரமாக செத்துப்போகும். குறிப்பாக நாக்கில் துளையிடும் போது, நரம்புகள் பாதிப்புக்குள்ளாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

முக்கியமாக துளையிடுபவர் வல்லுனராக இல்லாத போது தான், இத்தகைய பிரச்சனை ஏற்படும். துளையிடுவதில் வல்லுநர் இல்லாதவர் சுகாதாரமற்ற இடத்தில் துளையிட்டால் இரத்த சம்பந்த நோய்களான எச்.ஐ.வி. கிருமி, ஈரல் அழற்சி மற்றும் இதர நோய்களை ஏற்படுத்தும்.

Popular Post

Tips