பிபியைக் குறைக்க பூண்டு சாப்பிடுங்க…!

uyar raththa aluththaththaal paathikkappadupavarkalin ennekkai naalukku naal athikariththu varukirathu. ithayanooy  varuvatharkaana kaaranankalil muthal kaaranamaaka irukkirathu ithu. aanaal, poondu chaappidum poathu peepi yai kanechamaana alavil kuraikkalaam enru aayvu onru theriviththullathu. aasthiraeliyaavil ulla yunevarchiddi aap adilaydaich chaerntha paeraachiriyar daakdar karin reed enpavar thalaimaiyilaana kuluvinar uyar raththa aluththaththaik kuraippathu thodarpaana aaraaychchiyil eedupaddu vanthanar. 140 em em echjikkum athika … Continue reading "pipiyaik kuraikka poondu chaappidunka…!"
pipiyaik kuraikka poondu chaappidunka…!

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதயநோய்  வருவதற்கான காரணங்களில் முதல் காரணமாக இருக்கிறது இது. ஆனால், பூண்டு சாப்பிடும் போது பீபி யை கணிசமான அளவில் குறைக்கலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் அடிலெய்டைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் கரின் ரீட் என்பவர் தலைமையிலான குழுவினர் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். 140 எம் எம் எச்ஜிக்கும் அதிக அளவு பீபி உள்ள 50 பேருக்கு நாள்பட்ட பூண்டை அடிப்படையாகக் கொண்டு  தயாரிக்கப்பட்ட மாத்திரை 12 வாரங்களுக்கு தரப்பட்டது.

அதன் பிறகு அவர்களை பரிசோதனை செய்துப் பார்த்ததில் 10 எம்எம்எச்ஜி வரை பீபி குறைந்திருந்தது தெரியவந்தது. பீபி அளவு குறைவதால் நோய் ஆபத்தும் குறையும் என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 5 எம்எம் அளவுக்கு பீபி குறைவதன் முலம் இதயநோய்  ஏற்படுவதற்கான வாய்ப்பு 8 முதல் 20 சதவீதம் வரை குரையும் என்கிறது ஆய்வின் முடிவு. பூண்டில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தக்கூடிய நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய ரசாயன பொருட்கள் இருக்கின்றன. இதனால்தான் பூண்டு ரத்தஅழுத்தத்தை கட்டுபடுத்த தயாரிக்கப்படும் மருந்து தயாரிக்க பயன்படும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் பூண்டை பச்சையாகவே அல்லது வேகவைத்தோ சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular Post

Tips