குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும் மகாலட்சுமி விரதம்

valampuri chankil vaalpaval chankaladchumi, maankalyaththil uraipaval chavupaakkiyaladchumi, theepaththil iruppaval theepaladchumi, veeranen tholil vaalil thikalpaval veeraladchumi, veeddin vaayilil pajchaladchumi, makudaththil makuda ladchumiyaakavum, kupaeranukku chelvavalam koduththu, chankanethi, pathmanethiyaakavum vilankupaval makaaladchumi. vellikilamaikalil thaamarai koalamiddu, malarkalaal thirumakalin palvaeru naamam cholli archchippavarukku ellaa nalamum arulakkoodiyaval thirumakal. thaenaiyum, paalaiyum naivaeththiyamaaka virumpa koodiyaval.  unavukalil annaladchumi ena vilankum annathaanam alippavaridam virumpi thankukiraal. thooymaiyaana … Continue reading "kulanthai paakkiyam kidaikka cheyyum makaaladchumi viratham"
kulanthai paakkiyam kidaikka cheyyum makaaladchumi viratham

வலம்புரி சங்கில் வாழ்பவள் சங்கலட்சுமி, மாங்கல்யத்தில் உறைபவள் சவுபாக்கியலட்சுமி, தீபத்தில் இருப்பவள் தீபலட்சுமி, வீரனின் தோளில் வாளில் திகழ்பவள் வீரலட்சுமி, வீட்டின் வாயிலில் பஞ்சலட்சுமி, மகுடத்தில் மகுட லட்சுமியாகவும்,

குபேரனுக்கு செல்வவளம் கொடுத்து, சங்கநிதி, பத்மநிதியாகவும் விளங்குபவள் மகாலட்சுமி. வெள்ளிகிழமைகளில் தாமரை கோலமிட்டு, மலர்களால் திருமகளின் பல்வேறு நாமம் சொல்லி அர்ச்சிப்பவருக்கு எல்லா நலமும் அருளக்கூடியவள் திருமகள்.

தேனையும், பாலையும் நைவேத்தியமாக விரும்ப கூடியவள்.  உணவுகளில் அன்னலட்சுமி என விளங்கும் அன்னதானம் அளிப்பவரிடம் விரும்பி தங்குகிறாள். தூய்மையான மனமும், உடலும் கொண்டவரிடம் லட்சுமி மகிழ்வாக உறைகிறாள்.

விரதமிருந்து பால்நிவேதனம் செய்து லட்சுமிக்கு படைத்தது ஏழை குழந்தைகளுக்கு அளித்து வந்தால் குழந்தை பேறு கிட்டும். நாகபஞ்சமி அன்று நாகலட்சுமியை வழிபடுவது நலம்.

பூத்துக்குலுங்கும் தோட்டங்களிலும், தாமரைக்குளத்திலும், சந்தன, பன்னீர் திரவியங்களிலும், உப்பு, இனிப்பிலும் இருப்பவள் லட்சுமி. கோலமிட்டு முன்வாசலில் விளக்கேற்றிய வீட்டிலும், பின்வீட்டில் மாட்டு தொழுவத்திலும் கிரஹலட்சுமி வாழ்கிறாள்.

Popular Post

Tips