பவுர்ணமி விரத பூஜை பலன்கள்

pavurnami poojai ovvooru virathamum, ovvooru valipaadum palanaith tharukirathu. ithil chithraa pavurnami naalil iraivanukku cheyyum apishakankaludan, marikkolunthu ilaikalai kondu apishakam cheyvathum, antha ilaikalaal archchippathum chirappaana palankalai tharum. chivaperumaanukku chithraa pavurnami naalil venmai nera paddaadaiyaich chamarppippathu nanmai alikkum. maelum maatham maatham varum pavurnamikku viratham irukka vaendum. muthan muthalaana viratham irukka aarampippavarkal chiththirai maatha pavurnamiyil iruntha thodarnthu viratham … Continue reading "pavurnami viratha poojai palankal"
pavurnami viratha poojai palankal

பவுர்ணமி பூஜை ஒவ்வொரு விரதமும், ஒவ்வொரு வழிபாடும் பலனைத் தருகிறது. இதில் சித்ரா பவுர்ணமி நாளில் இறைவனுக்கு செய்யும் அபிஷேகங்களுடன், மரிக்கொழுந்து இலைகளை கொண்டு அபிஷேகம் செய்வதும், அந்த இலைகளால் அர்ச்சிப்பதும் சிறப்பான பலன்களை தரும்.

சிவபெருமானுக்கு சித்ரா பவுர்ணமி நாளில் வெண்மை நிற பட்டாடையைச் சமர்ப்பிப்பது நன்மை அளிக்கும். மேலும் மாதம் மாதம் வரும் பவுர்ணமிக்கு விரதம் இருக்க வேண்டும். முதன் முதலான விரதம் இருக்க ஆரம்பிப்பவர்கள் சித்திரை மாத பவுர்ணமியில் இருந்த தொடர்ந்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

பவுர்ணமி அன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தாமல் விரதம் இருக்கலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவு அருந்தி விரதம் இருந்து அன்று மாலை அம்மன் கோவில் அல்லது சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

அன்று மேலும் பலாசு எனப்படும் ஒரு வகை மரத்தில் மலரும் மலர்களை மாலைக்கும், அர்ச்சனைக்கும் பயன்படுத்துவது சிறந்த பலனைப் பெற்றுத்தரும். இந்த நாளில் விநாயகருக்கு நெய்விட்ட வெறும் சாதத்தை நைவேத்தியமாக படைக்கலாம். இவ்வாறு செய்தால் லட்சுமி கடாட்சமும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

Popular Post

Tips