முகம் வெள்ளையாக மாற செய்ய வேண்டியவை

veyilirunthu unkal charumaththai paathukaaththu  puthuppoalivu peruvatharku veeddilaeyae cheyyak koodiya eliya paesheyal chooriyanel irukkum yoo.vi. raes mukaththil paduvathaal thaan thol paathikkappaddu karumai neramaakirathu. ithaith thadukka kadalpaachi, chanthana enney, panneer moonraiyum chila thulikal kalanthu poochinaal thol alaku perum. jathikkaayum, chanthana pavudarum koodak kalanthu poadalaam. allathu kachakachaavil laman jus kalanthu poadalaam. paaludan elumichchai chaaru kalanthu, athanudan chirithalavu charkkaraiyai … Continue reading "mukam vellaiyaaka maara cheyya vaendiyavai"
mukam vellaiyaaka maara cheyya vaendiyavai

வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து  புதுப்பொலிவு பெறுவதற்கு வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய பேஷியல் சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது.

இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து பூசினால் தோல் அழகு பெறும்.

ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் லெமன் ஜூஸ் கலந்து போடலாம்.

பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.

கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.

பப்பாளிச் சாற்றை முகத்தில் பூசினால் வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.

கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.

எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.

தக்காளி சாறு தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும்.

கசகசாவை மூன்று அல்லது நான்கு ஸ்பூன் எடுத்து அரைத்து வடித்த கஞ்சி அல்லது தயிரில் போட்டுக் கலக்கி உடம்பில் தேய்த்துக் குளித்துவர, சரும அரிப்பு, உடல் வெப்பம் போன்ற தொல்லைகள் தீரும்.

Popular Post

Tips