திடீரென வரும் கோபத்தால் மரணம் ஏற்படும் எச்சரிக்கை

thideerena vedikkum koapam maaradaippu, pakkavaatham marrum ithaya nekalvu thoonduthalkalai irandu maneththiyaalankalukkul velippadach cheyyum ena yu.es. aaraaychchiyaalarkal kulu onru parinthuraiththullathu. airoppiya ithaya jarnalil velivantha oru puthiya aayvu, 18-varudakaalankalukkum maelaaka maruththuva thurai vallunarkalinaal maerkollap padda aayvukalin moolam theriyavanthullathaaka koorappaddallathu. haarvaed paadachaalai poathu chukaathaara kulu, thideer koapa velippaadu kaaranamaaka ithaya nekalvukalaana mana aluththam athanaal ithaya thudippu athikarippu iraththa … Continue reading "thideerena varum koapaththaal maranam aerpadum echcharikkai"
thideerena varum koapaththaal maranam aerpadum echcharikkai

திடீரென வெடிக்கும் கோபம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நிகழ்வு தூண்டுதல்களை இரண்டு மணித்தியாலங்களுக்குள் வெளிப்படச் செய்யும் என யு.எஸ். ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது.

ஐரோப்பிய இதய ஜேர்னலில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வு, 18-வருடகாலங்களுக்கும் மேலாக மருத்துவ துறை வல்லுநர்களினால் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டள்ளது.

ஹார்வேட் பாடசாலை பொது சுகாதார குழு, திடீர் கோப வெளிப்பாடு காரணமாக இதய நிகழ்வுகளான மன அழுத்தம் அதனால் இதய துடிப்பு அதிகரிப்பு இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாள தடைகள் போன்றன ஏற்படுகின்றன என கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் உடல் பருமனானவர்கள், புகைபிடிப்பவர்கள் அல்லது இதய நோய் வரலாறு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சுலபமாக எளிதில் இதய நிகழ்வுகள் ஏற்படலாமெனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோப வெளிப்பாட்டின் முழுத்தாக்கமே தனிநபர்களிடையே அதிக அளவில் காணப்படும் ஆபத்து காரணிகள் எனவும் அவர்கள் ஆய்வில் எழுதியுள்ளனர்.
அடிக்கடி கோப வெளிப்பாடு உள்ளவர்களுக்கு மாரடைப்பு , பக்கவாதம் போன்ற நோய்கள் அதிகமாக ஏற்படலாம்.

கோபத்திற்கும் அதனால் இதய பாதிப்பிற்கும் இடையில் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பிட்ட சில மருந்துகள், உளவியல் தலையீடுகள் கோப வெளிப்பாட்டினால் ஏற்படும் இதய நிகழ்வு அபாயங்களை குறைக்க உதவலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Popular Post

Tips