குளிர்பானங்களை விட்டு பழ ஜுஸ் குடியுங்கள்

tharpoathu koadai kaalam aarampikkum nelaiyil veyil chuddaerikka thodanki viddathu. athan thaakkaththil irunthu thappikka poathumakkal kulirpaanankalai naadukinranar. aanaal paaddilkalil adaikkappadum kulir paanankal udalnalaththukku pala kaedukalai vilaivippathaaka nepunarkal therivikkinranar. ivarrai vida pala juskalae udal nalaththukku nanmai payakkum enavum koorukinranar. paaddilkalil adaiththu virkappadum kulir paanankalil kaarpoaharaeddukalum, charkkaraiyum kalakkappaddullathu. 250 mi.li. kulirpaanam kudiththaal 105 kaloari chakthiyum, 26.5 kiraam charkkarai … Continue reading "kulirpaanankalai viddu pala jus kudiyunkal"
kulirpaanankalai viddu pala jus kudiyunkal

தற்போது கோடை காலம் ஆரம்பிக்கும் நிலையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை நாடுகின்றனர்.

ஆனால் பாட்டில்களில் அடைக்கப்படும் குளிர் பானங்கள் உடல்நலத்துக்கு பல கேடுகளை விளைவிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை விட பழ ஜுஸ்களே உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் எனவும் கூறுகின்றனர்.

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்களில் கார்போஹைரேட்டுகளும், சர்க்கரையும் கலக்கப்பட்டுள்ளது. 250 மி.லி. குளிர்பானம் குடித்தால் 105 கலோரி சக்தியும், 26.5 கிராம் சர்க்கரை சத்தும் உடலுக்கு கிடைக்கிறது.

அதே நேரத்தில் பழச்சாறு அதாவது ‘ஜுஸ்’ குடித்தால் 110 கலோரி சக்தியும், 26 கிராம் சர்க்கரை சத்தும் கிடைக்கிறது. இவை இரண்டையும் ஆராயும்போது குளிர்பானத்தில் குறைந்த அளவிலான சர்க்கரையும் உள்ளது.

சர்க்கரை அளவு கூடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதே நேரத்தில் நீரிழிவு நோய் இருப்பவர்களின் உடல்நிலை மேலும் மோசமடைகிறது.

இதுதவிர உடல் பருமனும், இருதய நோய்களும் உருவாகும் வாய்ப்பு ஏற்படுவதாகவும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் கலாஸ்கோவ் பல்கலைக்கழக இருதயநோய் மற்றும் மருத்துவ அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

எனவே பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பானங்களை விட பழ ஜுஸ்கள் உடல் நலத்துக்கு சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Post

Tips