ரஜினிக்கு குடும்பத்தில் நிம்மதியில்லாத வாழ்க்கை : குடும்பத்தில் குழப்பம்

ovvooru pada vilaavilum valakkamaaka thanathu irachikarkalukku arivurai chollum rajine intha murai thanathu irandu makalkal aisvaryaavukkum, chelantharyaavukkumae arivurai chollakkoodiya alavukku nelaimai poay viddathu. kadantha chila maathankalaakavae akkaa- thankai irandu paerukkullum ulla uravu avvalavu chariyaaka illai enru koalivuddil arachal purachalaaka paechi varukiraarkal. athu unmaithaan enpathu poala ‘koachchadaiyaan’ pada vilaavil irandu paerumae ethirum puthirumaaka nadanthu kondathu vanthiruntha vi.ai.pikkal … Continue reading "rajinekku kudumpaththil nemmathiyillaatha vaalkkai : kudumpaththil kulappam"
rajinekku kudumpaththil nemmathiyillaatha vaalkkai : kudumpaththil kulappam

ஒவ்வொரு பட விழாவிலும் வழக்கமாக தனது இரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் ரஜினி இந்த முறை தனது இரண்டு மகள்கள் ஐஸ்வர்யாவுக்கும், செளந்தர்யாவுக்குமே அறிவுரை சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை போய் விட்டது.

கடந்த சில மாதங்களாகவே அக்கா- தங்கை இரண்டு பேருக்குள்ளும் உள்ள உறவு அவ்வளவு சரியாக இல்லை என்று கோலிவுட்டில் அரசல் புரசலாக பேசி வருகிறார்கள்.

அது உண்மைதான் என்பது போல ‘கோச்சடையான்’ பட விழாவில் இரண்டு பேருமே எதிரும் புதிருமாக நடந்து கொண்டது வந்திருந்த வி.ஐ.பிக்கள் மத்தியில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது.

இசை வௌியீட்டு விழாவுக்கு சிரித்த முகத்தோடு தனது கணவர் தனுஷுடன் வந்த ஐஸ்வர்யா அவருக்கான இருக்கையில் அதே புன்னகை முகத்தோடு தான் அமர்ந்திருந்தார்.

ஆனால் மேடையில் இருந்த தங்கை செளந்தர்யாவோ விழாவுக்கு வராதவர்களை கூட ஞாபகத்தில் வைத்து வாயார புகழ்ந்து பாராட்டினார். ஆனால் அதே மேடைக்கு எதிர் இருக்கையில் இருந்த அக்கா ஐஸ்வர்யாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

வார்த்தைக்கு வார்த்தை அப்பா, அம்மா, தனது கணவர் அஸ்வின் ஆகியோருடைய பெயர்களைத் தான் சொன்னாரே தவிர மறந்தும் கூட அக்கா ஐஸ்வர்யாவின் பெயரையோ, மச்சான் தனுஷின் பெயரையோ உச்சரிக்கவே இல்லை.

இதனால் விழா ஆரம்பித்த நொடியிலிருந்தே முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா தனது அப்பா பேசும்போது மட்டும் சில இடங்களில் சிரித்தார். மற்றபடி ஏதோ கூப்பிட்ட கடமைக்கு வந்துவிட்டு, செம கடுப்போடு தான் இடத்தை விட்டு வெளியேறினார் ஐஸ்வர்யா.

பின்னர் நடந்த ‘கோச்சடையான்’ படத்தின் ஊடகவியலாளர் அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷை வைத்து ஒரு படம் இயக்குவீர்களா என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த செளந்தர்யா முடிஞ்சா நீங்களே அவரோட கால்ஷீட்டை வாங்கிக் கொடுங்களேன் என்றதோடு, அவங்க வழி வேற, என்னோட வழி வேற என்றும் சொல்லி சமாளித்தார்.

ஐஸ்வர்யா முதன்முதலாக இயக்கிய 3 படம் வௌியான அதேநாளில் தான் கோச்சடையான் படத்துக்காக லண்டனில் பிரம்மாண்டமாக ஊடகவியலாளர் சந்திப்பை வைத்து ஒட்டுமொத்த ஊடகங்களின் பார்வையையும் தன் திருப்பியிருந்தார் செளந்தர்யா.

அந்தக் கோபம் தான் இன்று வரை தொடருவதாகவும் விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். 

Popular Post

Tips