ஆடு மேய்க்கும் பிசியில் அமலாபால்

aadu maeykka amalaavukku karruththarukiraar chamuththirakkane. ‘mainaa‘ padaththil kaadu maedu alainthu nadiththa amalaa paalukku athanpiraku nakaraththu pennaakavae nadikka vaayppu vanthathu.  chamuththirakkane iyakkaththil nemirnthu nel padaththil jaeyam ravi jodiyaaka nadiththa amalaa paal meendum avar iyakkum puthiya padaththil nadikka ullaar. ithil chamuththirakkaneyae herovaakavum nadikkiraar. ithil kiraamaththu pennaaka varum amalaapaal aadu maeykkum vaedam aerkiraar. manthaiyaaka aadu maeykkumpoathu kaiyil pirampu … Continue reading "aadu maeykkum pichiyil amalaapaal"
aadu maeykkum pichiyil amalaapaal

ஆடு மேய்க்க அமலாவுக்கு கற்றுத்தருகிறார் சமுத்திரக்கனி. ‘மைனா‘ படத்தில் காடு மேடு அலைந்து நடித்த அமலா பாலுக்கு அதன்பிறகு நகரத்து பெண்ணாகவே நடிக்க வாய்ப்பு வந்தது. 

சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த அமலா பால் மீண்டும் அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் சமுத்திரக்கனியே ஹீரோவாகவும் நடிக்கிறார்.

இதில் கிராமத்து பெண்ணாக வரும் அமலாபால் ஆடு மேய்க்கும் வேடம் ஏற்கிறார். மந்தையாக ஆடு மேய்க்கும்போது கையில் பிரம்பு வைத்துக்கொண்டு ஆடுகள் சிதறி ஓடாமல் மேய்ப்பது எப்படி என்ற டெக்னிக்கை சமுத்திரக்கனி அவருக்கு சொல்லித் தருகிறாராம்.

ஏற்கனவே ‘சீவலப்பேரி பாண்டி‘ படத்தில் அஹானா மற்றும் வேறு சில ஹீரோயின்கள் ஆடு மேய்ப்பவராக நடித்துள்ளனர். அந்த பட்டியலில் அமலாவும் இடம்பிடிக்கிறார்.

Popular Post

Tips