நஸ்ரியாவால் அது முடியவே முடியாதாம்!

chinemaavil nadiththa chila padankalilaeyae periya alavil paechappaddavar nasriyaa. aanaal thanuchudan nadiththa nayyaandi padaththil thoppul charchchaiyai aerpaduththi avarathu imaejai daemaej panne viddanar. athanaal athanpiraku nasriyaavai vaiththu padam panna thayaarippaalarkalum, iyakkunarkalum payanthu othunkinar. iruppinum Kadhalil chothappuvathu eppadi padaththai iyakkiya paalaaji mokan maddum thamil, malaiyaalaththil thaan iyakkiyulla vaay moodi paechavum padaththukku thairiyamaaka avarai oppantham panne padaththaiyum mudiththu viddaar. … Continue reading "nasriyaavaal athu mudiyavae mudiyaathaam!"
nasriyaavaal athu mudiyavae mudiyaathaam!

சினிமாவில் நடித்த சில படங்களிலேயே பெரிய அளவில் பேசப்பட்டவர் நஸ்ரியா. ஆனால் தனுசுடன் நடித்த நய்யாண்டி படத்தில் தொப்புள் சர்ச்சையை ஏற்படுத்தி அவரது இமேஜை டேமேஜ் பண்ணி விட்டனர்.

அதனால் அதன்பிறகு நஸ்ரியாவை வைத்து படம் பண்ண தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பயந்து ஒதுங்கினர். இருப்பினும் காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் மட்டும் தமிழ், மலையாளத்தில் தான் இயக்கியுள்ள வாய் மூடி பேசவும் படத்துக்கு தைரியமாக அவரை ஒப்பந்தம் பண்ணி படத்தையும் முடித்து விட்டார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் நஸ்ரியா இருந்தால் கலகலப்பாக இருக்கும். யாரையும் பாரபட்சம் பார்க்காமல் அனைவருடனும் ஜாலியாக பேசிக்கொண்டேயிருப்பார். அந்தவகையில் ஒரு நிமிடம் அவரை பேசாமல் இருக்க வைப்பது நடக்காத காரியம். ஆனால் அப்படிப்பட்டவரையே இந்த படத்தில் அதிகம் பேசாமல் நடிக்க வைத்திருக்கிறேன். அது எனக்கு பெரிய சவாலாக இருந்தது என்றார் இயக்குனர் பாலாஜி மோகன்.

அதையடுத்து நஸ்ரியா பேசும்போது, நான் எப்போதுமே பர்பாமென்சுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முதலிடம் கொடுப்பேன். அந்தவகையில் இந்த படத்தில் என் நடிப்புக்கு தீனி போடும் நல்ல வேடம் கிடைத்தது. அதனால் இதற்கு முன்பு தமிழில் நான் நடித்து வெளியான நேரம், ராஜாராணி படங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

கூடவே எனது கோ-ஸ்டார் துல்கர்சல்மானுடன் ஏற்கனவே மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இது அவருடன் எனக்கு இரண்டாவது படம். அதனால் அவரை பேலன்ஸ் பண்ணி நடித்திருக்கிறேன் என்று கூறிய நஸ்ரியா, நான் ஸ்பாட்டில் எப்போதும் பேசிக்கொண்டேயிருந்ததாக சொன்னார்கள். அது நிஜம்தான். என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்கவே முடியாது.

எப்போதும் கலகலப்பாக இருக்கவே ஆசைப்படுவேன். அதோடு என்னை சுற்றியிருப்பவர்கள் மூடியாக இருந்தாலும் அவர்களையும் என்னைப்போன்றே கலகலப்பாக மாற்றி விடுவேன் என்கிறார் நஸ்ரியா.
 

Popular Post

Tips