மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன நடந்த இருக்கும்

maayamaana malaechiya vimaanam kuriththu palvaeru thakavalkal vantha vannam ullana. innelaiyil unmaiyil vimaanaththirku enna aakiyirukkalaam enru mooththa vimaane oruvar vilakkam aliththullaar. kadantha 8m thaethi 239 paerudan vimaanam onru malaechiya thalainakar koalaalampooril irunthu cheena thalainakar peyjinkirku kilampiyathu. aanaal antha vimaanam then cheena kadal pakuthiyil maayamaanathaakavum, malaakkaa jalachanthiyil maayamaanathaakavum iruvaeru thakavalkal ullana. innelaiyil vimaanaththirku unmaiyil enna nadanthirukkalaam enpathai … Continue reading "maayamaana malaechiya vimaanaththirku enna nadantha irukkum"
maayamaana malaechiya vimaanaththirku enna nadantha irukkum

மாயமான மலேசிய விமானம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உண்மையில் விமானத்திற்கு என்ன ஆகியிருக்கலாம் என்று மூத்த விமானி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 8ம் தேதி 239 பேருடன் விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. ஆனால் அந்த விமானம் தென் சீன கடல் பகுதியில் மாயமானதாகவும், மலாக்கா ஜலசந்தியில் மாயமானதாகவும் இருவேறு தகவல்கள் உள்ளன. இந்நிலையில் விமானத்திற்கு உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை 20 ஆண்டுகள் அனுபவம் மிக்க விமானி கிறிஸ் குட்ஃபெல்லோ கூறியதை பார்க்கலாம்.

மலேசிய விமானம் கிளம்பிய இரவு சூடாக இருந்தது. விமானமோ கனரகத்தைச் சேர்ந்தது. விமானம் கிளம்பிய ஒரு மணிநேரத்தில் வியட்நாம் செல்லும் வழியில் உள்ள வளைகுடாவில் மாயமானது. அதாவது டிரான்ஸ்பான்டர் மற்றும் செகன்டரி ரேடார் ஆஃப் ஆகியுள்ளது. இரண்டு நாட்கள் கழித்து விமானம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு இடையே உள்ள மலாக்கா ஜலசந்தியில் ரேடாரில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. Show Thumbnail

விமானத்தின் கேப்டன் ஜஹாரி அகமது ஷாவுக்கு 18 ஆயிரம் மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளது. விமானத்தை இயக்குகையில் எந்த விமானியும் அருகில் உள்ள விமான நிலையத்தை மனதில் வைத்தே செயல்படுவார். விமானம் இடது பக்கமாக திரும்பியது கேப்டன் அதை அந்தமான் தீவுகளில் உள்ள பலாவ் லாங்கவி விமான நிலையம் நோக்கி செலுத்தியதையே காட்டுகிறது. லாங்கவி நகர் அருகில் உள்ளதோடு வழியும் நன்றாக இருந்ததால் அவர் அங்கு சென்றுள்ளார்.

டிரான்ஸ்பான்டர்கள் மற்றும் தகவல் தொடர்பு சிஸ்டம்கள் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டால் செயல் இழந்துவிடும். அநேகமாக விமானத்தில் எலக்டரிக்கல் தீ விபத்து தான் ஏற்பட்டிருக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் முதலில் எரிந்த பாகங்களை விட்டுவிட்டு நல்ல எலக்ட்ரிக்கல் பாகங்களை பாதுகாப்பார்கள். மலேசிய விமானத்தில் ஏதோ சீரயஸாக நடந்திருக்க வேண்டும். அதனால் தான் சிப்பந்திகள் தீயை அணைப்பதிலும், விமானத்தை கட்டுக்குள் வைப்பதிலும் கவனம் செலுத்தி உள்ளனர்.

மலேசிய விமானத்தின் முன்னால் இருக்கும் லேண்டிங் கியர் டயர்கள் சூடுபிடித்து மெதுவாக எரியத் துவங்கியிருக்கலாம். இந்த தீயால் புகை மூட்டம் ஏற்பட்டிருக்கும். விமானிகள் ஆக்சிஜன் மாஸ்குகளை போட்டிருப்பார்கள். மேலும் புகையை கட்டுப்படுத்தும் சாதனத்தையும் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அது புகையின் அளவை பொருத்தே தாங்கும்.

மலேசிய விமானத்தில் புகை அதிகமாகி விமானம் ஆட்டோ பைலட்டில் எரிபொருள் தீரும் வரை பறந்திருக்கும். அல்லது தீ பரவி விபத்துக்குள்ளாகி விழும் வரை பறந்திருக்கும்.

விமானம் கடத்தப்பட்டிருக்கலாம், விமானி தற்கொலை செய்திருக்கலாம், பிளைட் என்ஜினியர் ஏதாவது செய்திருக்கலாம் என்பது நம்பும்படி இல்லை. ஆதாரம் கிடைக்கும் வரை நம்புவதாக இல்லை.

இணை விமானி தரை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு குட்நைட் தெரிவித்துள்ளார். விமானத்தில் ஏதாவது பிரச்சனை இருந்திருந்தால் அவர் நிச்சயம் ஏதாவது சிக்னல் மூலமாக தெரிவித்திருப்பார். மூன்று முறை அவர் ஸ்விட்ச்சை கிளிக் செய்தால் கூட பிரச்சனை என்பது தெரிந்திருக்கும். ஆனால் அவர் குட்நைட் மட்டும் கூறியதால் விமானத்தில் பிரச்சனை இல்லை என்றே தெரிகிறது. விமானிகளுக்கு தெரியாமலேயே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.

விமானத்தில் உள்ள தகவல் தொடர்பு சிஸ்டம் செயல் இழந்துள்ளது. அதை அவ்வளவு எளிதில் செயல் இழக்கச் செய்ய முடியாது. இதை பார்க்கையில் ஒன்று விமானத்தில் எலக்ட்ரிக்கல் பிரச்சனை இருந்திருக்கும் அல்லது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்த சிஸ்டம் சிக்னல்கள் கொடுக்காதது விமானிகளுக்கே தெரியாமல் இருந்திருக்கலாம்.

விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த விமானி அதை 45,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்று வேகமாக அதை 25,000 அடிக்கு கீழே கொண்டு வந்திருக்கலாம். அப்போது விமானம் கட்டுப்பாட்டை இழக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் 45,000 அடியில் விமானம் கடத்தப்பட்டது என்பது நம்பும்படி இல்லை.

விமானம் மலேசியாவில் இருந்து கிளம்பியபோது அதில் பெய்ஜிங் செல்லும் அளவுக்கும், மேலும் ஷாங்காய் செல்லும் அளவுக்கும் எரிபொருள் இருந்திருக்கும். இதனால் விமானி லாங்கவி பக்கம் செல்கையில் மேலும் 6 மணிநேரம் அல்லது கூடுதல் நேரம் பறக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்திருக்கும்.

விமானம் கூடுதல் நேரம் பறந்ததை பார்க்கையில் அது தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பறந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது

விமானம் தீப்பிடித்தால் உடனே அதை தரையிறக்கவே விமானி முயற்சிப்பார் என்று கிறிஸ் தெரிவித்துள்ளார்.

 

Popular Post

Tips