மாயமான விமானத்துடன் தொடர்புடைய 2 பாகங்கள் ஆஸ்திரேலியாவில்

irandu poarudkal kandupidikkappaddullathu. atharkum maayamaana malaechiya vimaanaththirkum thodarpu irukkalaam enru aasthiraeliya pirathamar done aapaad theriviththullaar. ithu kuriththu done aasthiraeliya naadaalumanraththil koorukaiyil, malaechiya vimaanam maayamaaki irandu vaarankal kaliththu puthiyathu marrum nampaththakuntha thakaval kidaiththullathu. irandu poarudkal kidaiththullana. atharkum maayamaana vimaanaththirkum thodarpu irukkalaam. aasthiraeliya vimaanappadaiyaana aariyan antha poarudkalai paarkka 3 kankaaneppu vimaanankaludan anuppi vaikkappaddullathu enraar. done athu enna … Continue reading "maayamaana vimaanaththudan thodarpudaiya 2 paakankal aasthiraeliyaavil"
maayamaana vimaanaththudan thodarpudaiya 2 paakankal aasthiraeliyaavil

இரண்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கும் மாயமான மலேசிய விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டோனி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறுகையில், மலேசிய விமானம் மாயமாகி இரண்டு வாரங்கள் கழித்து புதியது மற்றும் நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.

இரண்டு பொருட்கள் கிடைத்துள்ளன. அதற்கும் மாயமான விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம். ஆஸ்திரேலிய விமானப்படையான ஆரியன் அந்த பொருட்களை பார்க்க 3 கண்காணிப்பு விமானங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். டோனி அது என்ன பொருட்கள், அவை எங்கு காணப்பட்டன என்பதை தெரிவிக்கவில்லை.

இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தை தேடும் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறுகையில், விமான தேடலுடன் தொடர்புடைய தகவல் செயற்கைக்கோள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளது.

விஞ்ஞானிகள் அந்த செயற்கைக்கோள் புகைப்படத்தை ஆய்வு செய்து விமானத் தேடலுடன் தொடர்புடைய பொருட்கள் இரண்டு காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதை வைத்து உடனே எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது என்றார்.

Popular Post

Tips