மாயமான விமானத்தின் இணை விமானியின் காதலியின் தகவல்

marmamaaka kaanaamal poayulla malaesheya eyaarlains em.ech. 370 vimaanaththin inai vimaaneyaana paarik apthul hameed uyirudan veedu thirumpuvaar ena avarin  Kadhali natheeraa ramli nampikkaiyudan kaaththirukkiraar. kadantha 8 aam thikathi athikaalai peyjin nookki 239 paerudan chenra  vimaanaththai   thalaimai vimaaneyaana  sahaaree ahamad shaavum (53) inai vimaaneyaana paarik apthul hameeddum cheluththich chenranar. vimaanaththilirunthu malaesheya vimaanak kadduppaaddu nelaiya athikaarikaludan iruthiyaaka uraiyaadiyavar … Continue reading "maayamaana vimaanaththin inai vimaaneyin Kadhaliyin thakaval"
maayamaana vimaanaththin inai vimaaneyin Kadhaliyin thakaval

மர்மமாக காணாமல் போயுள்ள மலேஷிய எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானத்தின் இணை விமானியான பாரிக் அப்துல் ஹமீட் உயிருடன் வீடு திரும்புவார் என அவரின்  காதலி நதீரா ரம்லி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

கடந்த 8 ஆம் திகதி அதிகாலை பெய்ஜிங் நோக்கி 239 பேருடன் சென்ற  விமானத்தை   தலைமை விமானியான  ஸஹாரீ அஹமட் ஷாவும் (53) இணை விமானியான பாரிக் அப்துல் ஹமீட்டும் செலுத்திச் சென்றனர்.

விமானத்திலிருந்து மலேஷிய விமானக் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளுடன் இறுதியாக உரையாடியவர் இணை விமான பாரிக் அப்துல் ஹமீட்  என நம்பப்படுகின்றது.

விமானத்தின் பயணப்பாதை மாற்றப்படப்போவது குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக  அவர் 'ஓல் ரைட், குட் நைட்' என வழக்கத்துக்கு மாறாக கூறினாரா அல்லது விமானத்திற்குள் ஏதோ ஆபத்து என்பதை கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளுக்கு இரகசியமாக அறிவிப்பதற்காக இப்படி கூறினாரா என்பதை அறியயும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

227 பயணிகளுக்கும் 12 ஊழியர்களுக்கும் என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்கு சுமார் 25 நாடுகள் இணைந்து தேடுதல்களையும் விசாரணைகளையும் நடத்தி வருகின்றன. அதேவேளை மேற்படி விமானத்தில் சென்ற தமது அன்புக்குரியவர்கள் வீடு திரும்புவார்களான என 239 பேரினதும் உறவினர்கள், நண்பர்கள்; காத்திருக்கின்றனர்.

துணை விமானி பாரிக் அப்துல் ஹமீட்டின் காதலியான நதீரா ரம்லியும் அவர்களில் ஒருவராவார்.

26 வயதான நதீரா ரம்லியும்  நதீரா ரம்லியும் ஒரு விமானியாவார் என்பது குறிப்பிடத்தக்கது. நதீராவும் 27 வயதான பாரிக் அப்துல் ஹமீட்டும்  இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் 9 வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். மலேஷியாவின் லாங்கவி விமானப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சிக்காக இணைந்தபோதுதான் இவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்தனராம்.

விமானத்தை செலுத்திக்கொண்டு வானில் பறக்க வேண்டும் என்ற கனவுகளோடு பயிற்சியில் இணைந்த பாரிக் அப்துல் ஹமீட்டும் நதீரா ரம்லியும் பின்னர் காதல் வானிலும் பறக்க ஆரம்பித்தனர்.

2007 ஆம் ஆண்டு ஹமீட்டுக்கு மலேஷிய எயார்லைன்ஸ் நிறுவனத்தில் தொழில் கிடைத்தது. ஆவரின் காதலியான நதீரா, சிக்கன கட்டண சேவையை வழங்கும் எயார் ஏஷியா எனும் மலேஷிய விமான நிறுவனத்தில் இணைந்தார். கெப்டன் தர விமானியாக நதீரா பணியாற்றுகிறார். இவரின் தந்தையான இப்ராஹிம் ரம்லி மலேஷிய எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானியாவார்.

பாரிக் அப்துல் ஹமீட்டும் நுதீரா ரம்லிம் விரைவில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால், எம்.எச்.370 விமானம் மர்மமாக காணாமல் போனமை இவர்களின்  எதிர்காலத் திட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது.

காணாமல் போன விமானம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பல்வேறு கதைகள் குறித்து நதீராவின் தந்தை ரம்லி இப்ராஹிமும் தாயார் நான்ஸி ஜிப்பனிஸூம் கவலை கொண்டுள்ளனர் என மலேஷிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது கெப்டன் நதீராவுக்கு எயார் ஏஷியா நிறுவனம் ஒரு மாதகால விடுமுறை வழங்கியுள்ளது.

துயரத்தில் வாடும் நதீரா தற்போது பாரிக் அப்துல் ஹமீட்டின் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். மகனைக் காணாத சோகத்தில் தவிக்கும் பாரிக் அப்துல் ஹமீட்டின் தாயாருக்கு நம்பிக்கையூட்டும் தூணாக நதீரா விளங்குகிறார் என இக்குடும்பத்தினருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

Popular Post

Tips