ஒரே நாளில் பல கோடிகளின் அதிபதியானவர்

piriddanaich chaerntha neel droddarukku yooro milliyans loththar cheeddiluppil 10.79 koadi sraelin pavun parichu kidaiththullathu. 41 vayathaana neel droddar kaar mekkaanek aavaar. pakuthi naeramaaka panthaya kaaroddaththilum eedupadupavar ivar. kadantha vellikkilamai nadaiperra cheeddiluppil ivarukku 10.79 koadi sraelin pavun parichu kidaiththullathu. ichcheeddiluppu nadaiperuvatharku chila maneththiyaalankalukku munnar 'naalai innaeram naan oru koadeesvaranaaka iruppaen' ena thannudan paneyaarrum ooliyarkalidam neel droddar … Continue reading "orae naalil pala koadikalin athipathiyaanavar"
orae naalil pala koadikalin athipathiyaanavar

பிரிட்டனைச் சேர்ந்த நீல் ட்ரொட்டருக்கு யூரோ மில்லியன்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் 10.79 கோடி ஸ்ரேலிங் பவுண் பரிசு கிடைத்துள்ளது.

41 வயதான நீல் ட்ரொட்டர் கார் மெக்கானிக் ஆவார். பகுதி நேரமாக பந்தய காரோட்டத்திலும் ஈடுபடுபவர் இவர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீட்டிழுப்பில் இவருக்கு 10.79 கோடி ஸ்ரேலிங் பவுண் பரிசு கிடைத்துள்ளது.

இச்சீட்டிழுப்பு நடைபெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் 'நாளை இந்நேரம் நான் ஒரு கோடீஸ்வரனாக இருப்பேன்' என தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களிடம் நீல் ட்ரொட்டர் எதிர்வு கூறினாராம்.

'வியாழனன்று எனது தந்தையின் அலுவலகத்தில் வைத்து நாளை இந்நேரம் நான் கோடீஸ்வரனாகி விடுவேன் என ஊழியர்களிடம் கூறினேன். நான் அதிர்ஷ்டகரமானவனாக உணர்ந்தேன். அதன்படி நான் வென்றுவிட்டேன்' என  சர்ரே நகரில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நீல் ட்ரொட்டர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மாலை சீட்டிழுப்பு முடிந்தவுடன் பெறுபேற்றுடன் எனது லொத்தர் சீட்டு இலக்கங்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். ஒன்றன்பின் ஒன்றாக இலக்கங்கள் பொருந்தியமை ஆச்சரியகரமாக இருந்தது.

நான் யூரோ மில்லியன்ஸ் லொத்தரில் வென்றுவிட்டேன் எனது துணைவியிடம் கூறினேன். அவரோ வாயை மூடுமாறும் முட்டாளாக செயற்படுவதை நிறுத்துமாறும் கூறினார்' எனவும் நீல் ட்ரொட்டர் தெரிவித்தார்.

இவரின் துணைவியான நிக்கி ஒத்தாவேவும் 8 வருடங்களாக இணைந்து வாழ்கின்றனர். துற்போது மிக ஆடம்பரமான முறையில் திருமண வைபவத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக நீல் ட்ரொட்டர் கூறினார்.

தனது தொழிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் பல புதிய கார்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Popular Post

Tips