சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை எவாவாறு அறியலாம்

chivapuraanaththin padi oruvan irakkap poakiraan enpathai  evaavaaru ariyalaam ivvulakil pirappu enra onru irunthaal, irappu enra onru nechchayam irukkum. pirappai kandu makilum naam, irappaip kandu achchamadaivom. chaathikkum yaarukkum irakka vaendumenra ennam irukkaathu. iruppinum, nechchayam oru kaddaththil anaivarum irakka naeridum. athai yaaraalum thadukka mudiyaathu. iththakaiya irappai chanthikkum munpu oruchila arikurikal thenpadum. maelum chivapuraanaththil oruvan irakkap poakiraan enpathai … Continue reading "chivapuraanaththin padi oruvan irakkap poakiraan enpathai evaavaaru ariyalaam"
chivapuraanaththin padi oruvan irakkap poakiraan enpathai evaavaaru ariyalaam

சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை  எவாவாறு அறியலாம்

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது.

இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும்.

மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபுராணத்தின் படி, பார்வதி தேவி சிவனிடம் ஒருவன் இறக்க போகிறான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டுள்ளார்.

அப்போது சிவன் ஒருசிலவற்றை கூறி, அத்தகைய அறிகுறிகள் இருந்தால், அவன் சீக்கிரம் இறக்க போகிறான் என்று சொன்னார். இங்கு சிவபெருமான் கூறிய அந்த அறிகுறிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படித்து பாருங்கள்.

அறிகுறி 1

எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 2

எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

அறிகுறி 3

எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 4

ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 6

நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 7

எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

அறிகுறி 8

ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 9

சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 10

ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்

 

Popular Post

Tips