பாஜகவின் புதிய தேர்தல் வியூகம்

kirikked poaddi moolam paajaka thanathu thaerthal pirachchaaraththai thodankiyullathu. arachiyal kadchiyinar thankal kadchiyai makkalidam kondu chaerkka pala vitha yukthikalai kaiyaalukinranar. ithanpadi ilaijarkalin kirikked mokaththaip payanpaduththi paajaka thanathu pirachchaaraththai thodankiyullathu. pirathamar vaedpaalar modi intha vilamparaththil munnelaippaduththappadukiraar. kirikked poaddiyin thodakkaththil naanaya chularchikkuth thayaaraakiraar naduvar. oru kulu thalaivar maddumae naduvar munpu vanthu nerkiraar. aanaal marroru kuluvil irandu paer varukinranar. … Continue reading "paajakavin puthiya thaerthal viyookam"
paajakavin puthiya thaerthal viyookam

கிரிக்கெட் போட்டி மூலம் பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பல வித யுக்திகளை கையாளுகின்றனர்.

இதன்படி இளைஞர்களின் கிரிக்கெட் மோகத்தைப் பயன்படுத்தி பாஜக தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

பிரதமர் வேட்பாளர் மோடி இந்த விளம்பரத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

கிரிக்கெட் போட்டியின் தொடக்கத்தில் நாணய சுழற்சிக்குத் தயாராகிறார் நடுவர். ஒரு குழு தலைவர் மட்டுமே நடுவர் முன்பு வந்து நிற்கிறார். ஆனால் மற்றொரு குழுவில் இரண்டு பேர் வருகின்றனர்.

யார் தலைவர் என்பது குழப்பமாக இருக்கிறது. பாஜக அணியில் மோடி தான் பிரதமர் வேட்பாளர். எதிர் அணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குழப்பம் நீடிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

தொடர்ந்து ஆட்டமிழப்பு கேட்கும் பந்துவீச்சாளருக்கு நடுவர் அவுட் தர மறுக்கிறார். அவரை அடித்து, முகத்தில் குத்தி அவுட் தரச் சொல்கின்றனர்.

உடனே மோடி ஆட்சியில் குண்டர்களே இருக்கமாட்டார்கள் என்கின்றனர். மோடி ஆட்சியில் எந்த ஒரு காரியத்திற்காகவும் நேரம் வீணாகாதாம். எனவே பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்கின்றனர்.

துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் சொல்கிறார் பந்து வீச்சாளர். அதை நடுவர் மறுக்கிறார். உடனே நடுவருக்கு ரூபாய் நோட்டுக்களையும், டொலர்களையும் இலஞ்சம் தருகிறார். அதை ஏற்க நடுவர் மறுக்கிறார். உடனே மோடி ஆட்சியில் இலஞ்ச, ஊழல், கிரிக்கெட் சூதாட்டம் எதுவும் நடைபெறாது என்கின்றனர்.
 

Popular Post

Tips