அனிருத்தை களட்டி விட்ட அஜித்

3 padaththil, oy this kolaveri enra chooppar hed paadalaikkoduththu orae padaththin pukalin uchchaththukku chenravar ichaiyamaippaalar aneruth. athanpiraku ethirneechchal, vanakkam chennai, maankaraaththae poanra padankalukku ichaiyamaiththa avar, ippoathu thanushen vaelaiyillaa paddathaari, vijayyin kaththi padankalukku ichaiyamaiththuk kondirukkiraar. itharkidaiyae, kelathammaenan iyakkaththil, ajeth nadikkum padaththirkum aneruththaan ichaiyamaippathaaka irunthathu. athanaal orae naeraththil vijay-ajeth ena mekaa herokkalin padankalukku thaan ichaiyamaikka naeram kaikoodi … Continue reading "aneruththai kaladdi vidda ajith"
aneruththai kaladdi vidda ajith

3 படத்தில், ஒய் திஸ் கொலவெறி என்ற சூப்பர் ஹிட் பாடலைக்கொடுத்து ஒரே படத்தின் புகழின் உச்சத்துக்கு சென்றவர் இசையமைப்பாளர் அனிருத்.

அதன்பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே போன்ற படங்களுக்கு இசையமைத்த அவர், இப்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி, விஜய்யின் கத்தி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே, கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடிக்கும் படத்திற்கும் அனிருத்தான் இசையமைப்பதாக இருந்தது. அதனால் ஒரே நேரத்தில் விஜய்-அஜீத் என மெகா ஹீரோக்களின் படங்களுக்கு தான் இசையமைக்க நேரம் கைகூடி வந்ததால், சில சிறிய பட்ஜெட் படங்களை டீலில் விட்டு விட்டு காலறை தூக்கி விட்டு நடந்தார் அனிருத்.

ஆனால், இப்போது பார்த்தால் அஜீத் படம் கைநழுவிப்போய் விட்டது. தனது முதல் படமான மின்னலே தொடங்கி தான் இயக்கிய பல படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்பதால் தீவிரமாக யோசித்த கெளதம்மேனன், அஜீத்துடனான மேலான ஆலோசணைக்குப்பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் தனது படத்திற்கு இசையமைப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதனால், இனி கோடம்பாக்கமே தனது கையில்தான் என்று தனுஷ்- சிவகார்த்திகேயனுடன் தோள் போட்டுக்கொண்டு திரிந்த அனிருத்துக்கு இது பெரிய ஏமாற்றமாகியுள்ளது. இதையடுத்து, அஜீத் படத்துக்கு நீங்கள்தான் இசையமைப்பதாக சொன்னீர்கள்.

ஆனால் இப்போது ஹாரிஸ் இசையமைப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டு நச்சரிக்கும் நண்பர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மொபைலையே சுவிட் ஆப் செய்து வைத்து விட்டார் அனிருத். 

Popular Post

Tips