கள்ளக்காதலியுடன் ஓடிய 80வயது தாத்தா

kaacharkoadu maavaddaththil, thanathu Kadhaliyudan kudumpam nadaththum 80 vayathu kanavaridam jevanaamcham kaeddu 72 vayathaana manaivi neethimanraththil valakku thodarnthullaar. kaacharkoadu maavaddam kaajjankaadu arukae ulla pallikkarai pakuthiyai chaerntha raathaakirushnan (80), ivarathu manaivi chanthiraavathi (72). ivarkalukku kadantha 50 varudankalukku mun thirumanam nadanthullathu. tharpoathu, ivarkalathu 3 pillaikalukkum thirumanam aaki thaneththaneyaaka vachikkinranar. innelaiyil kadantha chila maathankalukku mun raathaakirushnan thideerena maayamaakiyullaar. pinnar, … Continue reading "kallakKadhaliyudan oadiya 80vayathu thaaththaa"
kallakKadhaliyudan oadiya 80vayathu thaaththaa

காசர்கோடு மாவட்டத்தில், தனது காதலியுடன் குடும்பம் நடத்தும் 80 வயது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு 72 வயதான மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காசர்கோடு மாவட்டம் காஞ்ஞங்காடு அருகே உள்ள பள்ளிக்கரை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (80), இவரது மனைவி சந்திராவதி (72).

இவர்களுக்கு கடந்த 50 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தற்போது, இவர்களது 3 பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ராதாகிருஷ்ணன் திடீரென மாயமாகியுள்ளார்.

பின்னர், தனது கணவர் ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கள்ளக்காதலி இருப்பதும், இருவரும் காஞ்ஞங்காட்டில் ஒரு வீட்டில் வசித்து வருவதையும் சந்திராவதி கண்டுபிடித்துள்ளார்.

இதையடுத்து சந்திராவதி அங்கு சென்று தன்னுடன் வருமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறியபோது, ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டதால், சந்திராவதி கணவனுக்கு எதிராக ஹோஸ்துர்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில், கள்ளக் காதலியுடன் வசித்து வரும் தனது கணவர் மாதந்தோறும் தனக்கு ரூ.5,000 ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக ராதாகிருஷ்ணனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Post

Tips