இறுதிக்கியையின் போது கண் விழித்த 3 வயது சிறுமி

iruthikkiyai jaepaththin poathu 3 vayathu chirumi, thalaiyai achaiththu, kan viliththu, uyirudan vantha champavam pilippains naaddil perum paraparappai aerpaduththiyullathu. pilippains naaddil ulla payapaas pakuthiyai chaerntha 3 vayathu chirumi kadumaiyaana kaaychchalukkullaanaal. athae pakuthiyil ulla vaiththiyachaalaiyil kadantha vellikkilamai chikkichchaikkkaaka anumathikkappadda chirumi, chikichchai palanenri kadantha chanekkilamai kaalai 9 maneyalavil iranthu viddathaaka daakdar theriviththaar. ithanaiyaduththu, antha chirumiyin piraethaththai kanneerudan veeddukku … Continue reading "iruthikkiyaiyin poathu kan viliththa 3 vayathu chirumi"
iruthikkiyaiyin poathu kan viliththa 3 vayathu chirumi

இறுதிக்கியை ஜெபத்தின் போது 3 வயது சிறுமி, தலையை அசைத்து, கண் விழித்து, உயிருடன் வந்த சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பயபாஸ் பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி கடுமையான காய்ச்சலுக்குள்ளானாள். அதே பகுதியில் உள்ள வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிக்கிச்சைக்க்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அந்த சிறுமியின் பிரேதத்தை கண்ணீருடன் வீட்டுக்கு எடுத்து வந்த பெற்றோர், இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அருகாமையில் உள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் இறந்த சிறுமியின் ஆன்மா சாந்தியடைய ஜெபக் கூட்டம் நடந்த போது, சவ அடக்கம் செய்யும் ஊழியர் ஒருவர், சவப்பெட்டியின் மூடியை திறந்தார்.

அப்போது, அந்த சிறுமியின் தலை லேசாக திரும்பியது. மெதுவாக கண் விழித்து, மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். இந்த அதிசயத்தை கண்டு நெகிழ்ந்துப் போன அவர், உடனடியாக சிறுமியின் தந்தையை அழைத்து இந்த நல்ல சேதியை தெரிவித்தார்.

உடனடியாக, அன்பு மகளை சவப்பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, மார்போடு அணைத்தபடி ஆனந்தக் கண்ணீர் வடித்த தந்தை, அருகாமையில் உள்ள வேறொரு நவீன வைத்தியசாலையில் அவளை அனுமதித்தார்.

தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமி, காய்ச்சலின் வீர்யத்தால் ‘கோமாட்டோஸ்’ என்னும் மயக்க நிலைக்கு சென்று விட்டாதாகவும், இதை புரிந்துக் கொள்ளாத டாக்டர் அவள் இறந்துப் போய் விட்டதாக தெரிவித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Popular Post

Tips