சனியின் துணை கோளில் புதிய தீவு

chooriya kudumpaththin mukkiyakoalaana chanekkoalin mikapperiya thunaikkoalaana daidanel puthiya theevu poanra onru thonri marainthathaaka vaaneyalaalarkal ariviththullanar. chooriya kudumpaththil irukkum oru koalaana poomikku eppadi chanthiran enkira thunaikkoal irukkiratho, athae poala, chooriyakkudumpaththin marroru koalaana chanekkum pala thunaikkoalkal irukkinrana. avai chanekkoalai churrivarukinrana. avarril periya thunaikkoalaana daidan enkira chanekkirakaththin thunaikkoal vaaneyal aayvaalarkalukku enrumae mikavum chuvaarasyamaana onru. kaaranam poomiyaippoalavae daidan thunaikkoalilum … Continue reading "chaneyin thunai koalil puthiya theevu"
chaneyin thunai koalil puthiya theevu

சூரிய குடும்பத்தின் முக்கியகோளான சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைடனில் புதிய தீவு போன்ற ஒன்று தோன்றி மறைந்ததாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒரு கோளான பூமிக்கு எப்படி சந்திரன் என்கிற துணைக்கோள் இருக்கிறதோ, அதே போல, சூரியக்குடும்பத்தின் மற்றொரு கோளான சனிக்கும் பல துணைக்கோள்கள் இருக்கின்றன. அவை சனிக்கோளை சுற்றிவருகின்றன.

அவற்றில் பெரிய துணைக்கோளான டைடன் என்கிற சனிக்கிரகத்தின் துணைக்கோள் வானியல் ஆய்வாளர்களுக்கு என்றுமே மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. காரணம் பூமியைப்போலவே டைடன் துணைக்கோளிலும் வளிமண்டலம் இருப்பதாலும், ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கப்படும் திரவ வடிவிலான கார்பனும் இருப்பதாலும் வானியலாளர்களுக்கு டைடன் குறித்து அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் இருந்துவந்திருக்கிறது.

இந்த பின்னணியில், டைடன் துணைக்கோளை படம்பிடித்த காசினி என்கிற ஐரோப்பிய ஒன்றியத்தின் வானியல் ஆய்வுக்கான பிரத்யேக செயற்கைக்கோள் டைடன் துணைக்கோளை சமீபத்தில் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது. அதில் இந்த டைடன் துணைக்கோளில் தீவு போன்ற ஒன்று தோன்றி மறைந்ததாக புகைப்படங்கள் காட்டியிருப்பதாக வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இப்படி டைடன் துணைக்கோளில் தோன்றி மறைந்த தீவுபோன்ற திட்டுப்பகுதி என்னவாக இருக்கும் என்பதில் பல்வேறு யூகங்கள் நிலவுவதாக தெரிவிக்கும் சென்னையிலுள்ள பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இணை இயக்குநர் முனைவர் சவுந்தர்ராஜ பெருமாள், இது வானியல் ஆய்வின் முக்கிய மைல்கல் என்றும் தெரிவிக்கிறார்.

Popular Post

Tips