மூக்கில் வளர்ந்த பல்

chavuthi araepiyaa naaddai chaerntha oruvarukku mookkin ulpakuthiyil pal valarnthullathu. intha pallai maruththuvarkal aruvai chikichchai cheythu akarriyullanar. ithukuriththa athirchchi thakaval pinvarumaaru :- chavuthi araepiyaavai chaerntha 22 vayathu vaalipar oruvarukku adikkadi mookkil irunthu raththam vanthu kondae irunthathu. ithanaal avar maruththuvaridam chenru kaaddiyapoathu, maruththuvarkal avarudaiya mookkin ulpakuthiyil oru chiriya alavilaana pal valarnthullathai kandupidiththu athirchchi adainthanar. mookkin ulpakuthiyil pal … Continue reading "mookkil valarntha pal"
mookkil valarntha pal

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ஒருவருக்கு மூக்கின் உள்பகுதியில் பல் வளர்ந்துள்ளது. இந்த பல்லை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.
இதுகுறித்த அதிர்ச்சி தகவல் பின்வருமாறு :-

சவுதி அரேபியாவை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருக்கு அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்தது.

இதனால் அவர் மருத்துவரிடம் சென்று காட்டியபோது, மருத்துவர்கள் அவருடைய மூக்கின் உள்பகுதியில் ஒரு சிறிய அளவிலான பல் வளர்ந்துள்ளதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.

மூக்கின் உள்பகுதியில் பல் வளர்ந்ததால் அந்த வாலிபர் மூக்கை துடைக்கும்போது பல் மூக்கின் மேல்பகுதியில் பட்டு ரத்தம் வந்துள்ளது. பின்னர் பல் மருத்துவ நிபுணர் உதவியுடன் மூக்கினுள் இருந்த பல் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள University of Iowa என்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவ பேராசிரியராக இருக்கும் Dr John Hellstein அவர்களை வரவழைத்து அவர் முன்னிலையில் மூக்கினுள் இருந்த பல்லை பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சை நடந்தது.

இதுகுறித்து பேராசிரியர் Dr John Hellstein கூறியதாவது :-

"ஒரு சில காரணங்களால் உடலின் வெவ்வேறு பகுதிகளில் மிகவும் அபூர்வமாக பல் முளைக்கும் என்பதை இதுவரை நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் எனது வாழ்வில் மூக்கினுள் பல் வளர்ந்துள்ளதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்" என்று கூறினார்.

தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சவுதி அரேபியர் வாலிபர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular Post

Tips