ஒரு கோடி சமப்ளம் வாங்கும் நடிகைக்கு திருமணம் வேண்டாமாம்

kumki padaththin moolam arimukamaaki athan pinnar chuntharapaandiyan, paandiya naadu, majchappai, naan chikappu manethan, marrum chameepaththil veliyaana jikarthandaa aakiya padankalil nadiththa ladchumimaenan thaan vaalkkaiyil thirumanamae cheyyaamal vaalap poavathaaka chameepaththil paeddiyaliththullaar. chameepaththil oru munnane paththirikai onrukku paeddiyaliththa ladchumi maenan thanakku vaalkkaiyil thirumanam cheythukolla vaendum enra ennamae illaiyenrum, thirumanamae cheyyaamal naaddukku thondu cheytha penkalin vaalkkaiyai pinparri vaala iruppathaaka … Continue reading "oru koadi chamaplam vaankum nadikaikku thirumanam vaendaamaam"
oru koadi chamaplam vaankum nadikaikku thirumanam vaendaamaam

கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், மற்றும் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்த லட்சுமிமேனன் தான் வாழ்க்கையில் திருமணமே செய்யாமல் வாழப் போவதாக சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த லட்சுமி மேனன் தனக்கு வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லையென்றும், திருமணமே செய்யாமல் நாட்டுக்கு தொண்டு செய்த பெண்களின் வாழ்க்கையை பின்பற்றி வாழ இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் சினிமா உலகில் அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களுக்கு ஜோடியாக நடிப்பதே தனது அடுத்த இலக்கு என்று கூறுகிறார்  லட்சுமி மேனனின் சம்பளம் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

தற்போது சிப்பி, கொம்பன், ரஜினிமுருகன் ஆகிய தமிழ்ப்படங்களிலும், அவதாரம் என்ற மலையாளப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டாகி வருகிறது என்பதே இவர் ஒரு ராசியான நடிகை என்று பெயரெடுக்க காரணமாகிவிட்டது. 

Popular Post

Tips