முதலைக்கு தன்னை இரையாகி தற்கொலை செய்த பெண்

vaalkkaiyil virakthiyadainthu kaanappadda thaaylaanthu pen oruvar, muthalai pannaikkul kuthiththu muthalaikku thaanaaka iraiyaaki tharkolai cheythu kondathaakathakaval veliyaaki ullathu.. thaaylaanthin paankaak nakarai chaernthavar thipaavan pirakran(36). ivarathu kanavar chunai jichaathraa(55). vaalkkaiyil virakthiyadainthu kaanappadda thipaavan, paankaakkil ulla muthalai pannaiyai paarththuviddu, appadiyae daakdaraiyum chanthiththu viddu varuvathaaka kanavanedam koori chenrullaar. aanaal athanpiraku thipaavan veedu thirumpavillai. ithu kuriththu vichaariththa poathu, thipaavan muthalai … Continue reading "muthalaikku thannai iraiyaaki tharkolai cheytha pen"
muthalaikku thannai iraiyaaki tharkolai cheytha pen

வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட தாய்லாந்து பெண் ஒருவர், முதலை பண்ணைக்குள் குதித்து முதலைக்கு தானாக இரையாகி தற்கொலை செய்து கொண்டதாகதகவல் வெளியாகி உள்ளது..

தாய்லாந்தின் பாங்காக் நகரை சேர்ந்தவர் திபாவன் பிரக்ரன்(36). இவரது கணவர் சுனை ஜிசாத்ரா(55). வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட திபாவன், பாங்காக்கில் உள்ள முதலை பண்ணையை பார்த்துவிட்டு, அப்படியே டாக்டரையும் சந்தித்து விட்டு வருவதாக கணவனிடம் கூறி சென்றுள்ளார்.

ஆனால் அதன்பிறகு திபாவன் வீடு திரும்பவில்லை. இது குறித்து விசாரித்த போது, திபாவன் முதலை பண்ணைக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. ஆனால் அவரது கணவர் சுனை, முதலை பண்ணையில் உள்ள பணியாளர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் தனது மனைவி முதலை பண்ணையில் தவறிவிழுந்து பலியாகி உள்ளார். எனவே இதற்கு தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் முதலை பண்ணையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்த போது, திபாவன் தானாக முன்வந்து முதலை பண்ணைக்குள் குதித்து முதலைக்கு இரையாகி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து சுனை கூறியதாவது, தனது மனைவிக்கு இருந்த மனவிரக்தியில் இருந்து விடுபட அவர் தற்கொலை செய்துள்ளார். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றார். முதலை பண்ணை நிர்வாகம் இந்த சம்பவத்தை மறுத்துள்ளது.

Popular Post

Tips