வால் நட்சத்திரத்தை நெருங்கும் ரொசெட்டா விண்கலம்

airoppiya onriyaththin rocheddaa vinkalamaanathu, 67pi/churimov-kerachimenkaa vaal nadchaththiraththai naalai nerunkavullathu. navampar maatham vaal nadchaththiraththil athu tharaiyirankavullathu. paththu varudankalukku munpu rocheddaa vinkalam thanathu payanaththaith thodankiyathu. vaal nadchaththiram onril itharku munpu entha vinkalamum irankiyathillai.​ athaechamayam, rocheddaa vinkalamaanathu intha vaal nadchaththiraththai churri vanthu tharaiyirankukirathu enpathu kurippidaththakkathu. maelum, chooriya mandalaththirku appaal mikap periya neenda payanaththaiyum rocheddaa nekalththiyullathu.   aakasd 6 … Continue reading "vaal nadchaththiraththai nerunkum rocheddaa vinkalam"
vaal nadchaththiraththai nerunkum rocheddaa vinkalam

ஐரோப்பிய ஒன்றியத்தின் ரொசெட்டா விண்கலமானது, 67பி/சுரிமோவ்-கெரசிமென்கா வால் நட்சத்திரத்தை நாளை நெருங்கவுள்ளது.

நவம்பர் மாதம் வால் நட்சத்திரத்தில் அது தரையிறங்கவுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு ரொசெட்டா விண்கலம் தனது பயணத்தைத் தொடங்கியது. வால் நட்சத்திரம் ஒன்றில் இதற்கு முன்பு எந்த விண்கலமும் இறங்கியதில்லை.​

அதேசமயம், ரொசெட்டா விண்கலமானது இந்த வால் நட்சத்திரத்தை சுற்றி வந்து தரையிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சூரிய மண்டலத்திற்கு அப்பால் மிகப் பெரிய நீண்ட பயணத்தையும் ரொசெட்டா நிகழ்த்தியுள்ளது.
 
ஆகஸ்ட் 6 ஆம் திகதி புதன்கிழமையன்று ரொசெட்டா விண்கலம், 67பி வால் நட்சத்திரத்தை மேலும் நெருங்கும்.
 
இந்த விண்கலமானது இதுவரை 6.4 பில்லியன் கிலோமீ்ட்டர் தூரத்தைக் கடந்துள்ளது என்பது முக்கியமானது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி ரொசெட்டா தனது பயணத்தைத் தொடங்கியது. பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தைத் தாண்டி இது பயணப்பட்டுள்ளது.

மேலும் ஜூப்பிட்டர் கிரகத்தையும் இது தாண்டி தற்போது இந்த வால் நட்சத்திரத்தை நெருங்கியுள்ளது.
 
கடந்த மே மாதம் முதல் இதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது தனது இலக்கை இந்த விண்கலம் நெருங்கியுள்ளது.

 

Popular Post

Tips