மனைவி எப்படி அது தெரிந்தது

kudiththu viddu veeddirku varum kanavar, than manaivikku thaan kudiththathu therinthu vidak koodaathu ena nenaikkiraar. udanae thanathu laepdaappai eduththu vaelai cheyvathu poal amarnthu kolkiraar. appoathu ankae manaivi varukiraar. "kudichchiddu vanthirukkeenkalaa…?" "illaiyae…" "poay chollaatheenka… enakkuth theriyum neenka kudichchidduth thaan vanthirukkeenka…" kanavarukku aachcharyam thaankavillai. "eppadik kandupidichcha…?" erichchaludan manaivi cholkiraar… "mkkum… ithaik kandupidikka chipiai-yaa varanum … athaan paarththaalae theriyuthae…." … Continue reading "manaivi eppadi athu therinthathu"
manaivi eppadi athu therinthathu

குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவர், தன் மனைவிக்கு தான் குடித்தது தெரிந்து விடக் கூடாது என நினைக்கிறார்.
உடனே தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்வது போல் அமர்ந்து கொள்கிறார்.

அப்போது அங்கே மனைவி வருகிறார்.

"குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?"

"இல்லையே..."

"பொய் சொல்லாதீங்க... எனக்குத் தெரியும் நீங்க குடிச்சிட்டுத் தான் வந்திருக்கீங்க..."

கணவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
"எப்படிக் கண்டுபிடிச்ச...?"

எரிச்சலுடன் மனைவி சொல்கிறார்...

"ம்க்கும்... இதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும் ... அதான் பார்த்தாலே தெரியுதே...."

மேலும், கணவர் ஆச்சர்யத்துடன் கேட்கிறார்...
"எப்படி..?"

"நீங்க லேப்டாப்புனு நினைச்சு மடில வைச்சு வொர்க் பண்ணிட்டு இருக்கறது என்னோட சூட்கேஸ்"

"...?????"

Popular Post

Tips