இந்த சமூகம் என்ன செய்கிறது

inthach chamookaththaip parri ethuvum kaedkaatheerkal athu chuyanalamikkathu varumaiyilirukkum enkalai kandukolvathae illai naankal verum vayirudan irunthaalanna illai nervaanaththudan irunthaalanna nervaanappaduththappaddaalanna naankalallaam inkiruppathaakavae yaarukkum therinthirukkavillai ithae chamookam chuvaachikkum kaarraiththaan chuvaachikkirom ithae chamookam erikkum neruppilthaan enkal pachiyum adankukintharathu ithae chamookam puthaikkappadum nelaththilthaan enkal udalkalum puthaikkappadukinrana ithae chamookam parukum neeraiththaan parukukirom enkalin thaakaththaiyumthaan intha maekankal theerththu vaikkinrana aayinum inthach … Continue reading "intha chamookam enna cheykirathu"
intha chamookam enna cheykirathu

இந்தச் சமூகத்தைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள்
அது சுயநலமிக்கது
வறுமையிலிருக்கும் எங்களை
கண்டுகொள்வதே இல்லை

நாங்கள் வெறும் வயிறுடன் இருந்தாலென்ன
இல்லை நிர்வாணத்துடன் இருந்தாலென்ன
நிர்வாணப்படுத்தப்பட்டாலென்ன

நாங்களெல்லாம் இங்கிருப்பதாகவே
யாருக்கும் தெரிந்திருக்கவில்லை

இதே சமூகம் சுவாசிக்கும் காற்றைத்தான்
சுவாசிக்கிறோம்

இதே சமூகம் எரிக்கும் நெருப்பில்தான்
எங்கள் பசியும் அடங்குகின்தறது

இதே சமூகம் புதைக்கப்படும் நிலத்தில்தான்
எங்கள் உடல்களும் புதைக்கப்படுகின்றன

இதே சமூகம் பருகும் நீரைத்தான்
பருகுகிறோம்
எங்களின் தாகத்தையும்தான்
இந்த மேகங்கள் தீர்த்து வைக்கின்றன

ஆயினும் இந்தச் சமூகத்தைப் பற்றி கேட்காதீர்கள்
அது வாக்குகளை மட்டுமே
எங்களிடமிருந்து பறிக்கின்றது
அப்புறம் இந்தச் சமூகம் வேறு
நாங்கள் வேறு தெரியுமா ?

Popular Post

Tips