ப்ளூட்டோ கிரகத்தில் தண்ணீர் : உறுதிப்படுத்தியது நாசா

tharpoathu plooddo kirakaththilum neela vaanam marrum neer irukkirathu enra viyappooddum arikkai onrai pukaippadankaludan veliyiddullathu amerikkaa vinveli aaraaychchi nelaiyamaana naachaa..! kadantha velli anru naachaa, 'plooddo'vin muthal kalar pukaippadam onrai veliyiddathu enpathu kurippidaththakkathu. antha pukaippadaththil irunthu kirakaththil uraintha nelaiyil neer irukkakkoodum enru naachaa kooriyullathu. maelum, plooddo kirakamaanathu, poomiyin vaanaththai poanrae neela vaanam kondu choolappaddullathu enrum naachaa kooriyullathu. … Continue reading "plooddo kirakaththil thanneer : uruthippaduththiyathu naachaa"
plooddo kirakaththil thanneer : uruthippaduththiyathu naachaa

தற்போது ப்ளூட்டோ கிரகத்திலும் நீல வானம் மற்றும் நீர் இருக்கிறது என்ற வியப்பூட்டும் அறிக்கை ஒன்றை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா..!

கடந்த வெள்ளி அன்று நாசா, 'ப்ளூட்டோ'வின் முதல் கலர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படத்தில் இருந்து கிரகத்தில் உறைந்த நிலையில் நீர் இருக்கக்கூடும் என்று நாசா கூறியுள்ளது.

மேலும், ப்ளூட்டோ கிரகமானது, பூமியின் வானத்தை போன்றே நீல வானம் கொண்டு சூழப்பட்டுள்ளது என்றும் நாசா கூறியுள்ளது. ப்ளூட்டோ கிரகம் மிகுந்த குளிர்ச்சி நிலையில் உள்ளதால்(அதாவது மைனஸ் 220 டிகிரி) அங்கு இருக்கும் நீரானது நிச்சயம் உறைந்த நிலையில் தான் இருக்கும் என்கிறது நாசா.

உறைந்த நிலையில் இருக்கும் நீரானது ஏன் மிகவும் சிவந்த நிறத்தில் உள்ளது என்பதை பற்றி எந்த கருதும் இதுவரை தெரியவில்லை என்றும் நாசா விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.

Popular Post

Tips