நடுக்காட்டில் எலும்புக்கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் மலேசிய விமானமா?

pilippainchil ulla chukpaay theevil irukkum adarntha kaadduppakuthiyil pala elumpukaludan koodiya vimaanaththin paakam kidaiththullathu. jamil umar enpavar chukpaay theevil ulla kaadduppakuthikku paravaikalai vaeddaiyaada thanathu uravinarkaludan chenrullaar. appoathu, anku vimaanaththin paakam onru kidaiththullathu, athan arukae 70 inch neelamum, 35 inch akalamum konda malaechiya kodi onrum kidanthullathu. athu madduminri athil pala elumpukkoodukal irunthullathai paarththullanar. ithanaith thodarnthu, poalichaarukku thakaval … Continue reading "nadukkaaddil elumpukkoodukaludan kandupidikkappadda vimaanam malaechiya vimaanamaa?"
nadukkaaddil elumpukkoodukaludan kandupidikkappadda vimaanam malaechiya vimaanamaa?

பிலிப்பைன்ஸில் உள்ள சுக்பாய் தீவில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதியில் பல எலும்புகளுடன் கூடிய விமானத்தின் பாகம் கிடைத்துள்ளது.

ஜமில் உமர் என்பவர் சுக்பாய் தீவில் உள்ள காட்டுப்பகுதிக்கு பறவைகளை வேட்டையாட தனது உறவினர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு விமானத்தின் பாகம் ஒன்று கிடைத்துள்ளது, அதன் அருகே 70 இன்ச் நீளமும், 35 இன்ச் அகலமும் கொண்ட மலேசிய கொடி ஒன்றும் கிடந்துள்ளது.

அது மட்டுமின்றி அதில் பல எலும்புக்கூடுகள் இருந்துள்ளதை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து சென்ற பொலிசார் அப்பகுதியை பார்வையிட்டுள்ளனர்.

தற்போது, இது தொடர்பான தகவல் மலேசிய பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும், இது குறித்து உண்மையை கண்டறிய உதவுமாறு மலேசிய பொலிசார் பிலிப்பைன்ஸ் பொலிசாரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விமானம், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.ஹெச். 370 விமானம் என கருதப்படுகிறது.

 

Popular Post

Tips