செவ்வாய் கிரகத்தில் புத்தர்

chevvaay kirakaththil thanneer ullathu chameepaththilthaan uruthiyaakiyullathu. enenum, ankae manethanaal vaala mudiyumaa? chevvaayil manethar poanra uyirkal aethaenum aerkanavae vaalnthullathaa? ena palanooru kaelvikal elukinrana. ithuthodarpaana aayvil naachaavin vijjanekalum eedupaddullanar. chevvaay kirakaththil aayvu nadaththivarum naachaavin kiyooriyaachiddi rovar ropoa anuppum pukaippadankal intha aayvil mukkiya panku vakikkinrana. antha vakaiyil, kiyooriyaachiddi rovar chevvaay kirakaththin parappukalai avvappoathu aayvu cheythu pukaippadankalai anuppi varukinrathu. … Continue reading "chevvaay kirakaththil puththar"
chevvaay kirakaththil puththar

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது சமீபத்தில்தான் உறுதியாகியுள்ளது. எனினும், அங்கே மனிதனால் வாழ முடியுமா? செவ்வாயில் மனிதர் போன்ற உயிர்கள் ஏதேனும் ஏற்கனவே வாழ்ந்துள்ளதா? என பலநூறு கேள்விகள் எழுகின்றன.

இதுதொடர்பான ஆய்வில் நாசாவின் விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்திவரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரோபோ அனுப்பும் புகைப்படங்கள் இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அந்த வகையில், கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் பரப்புகளை அவ்வப்போது ஆய்வு செய்து புகைப்படங்களை அனுப்பி வருகின்றது. அதில், ஒரு படத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று இருப்பதாக யு.எஃப்.ஓ சைட்டிங்ஸ் டெய்லி என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று இருப்பதாக இந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அறிவார்ந்த வாழ்க்கை முறை, அங்கு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், இதனை நாசா நம்மிடமிருந்து மறைக்கப் பார்க்கிறது எனவும் இந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த புகைப்படத்தில் உள்ள பிரம்மாண்ட புத்தர் சிலையில் அவரது தலை வலது பக்கமாக திரும்பி இருப்பதும், மார்பகங்கள் மற்றும் ஒரு பருமனான வயிறு, தோள்பட்டை போன்றவை தென்படுவதாகவும் யு.எஃப்.ஓ சைட்டிங்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது. கிழக்காசிய கடவுளின் சிலையை வடிவமைத்து வழிப்பட்டு வந்த மக்களை இவர்கள் தற்போது தேடி வருகின்றனர்

இதேபோல், ஏலியனைப் போல் தோற்றமளிக்கும் நண்டு, கருப்பின பெண் என நாசா ஒவ்வொரு முறை புகைப்படம் வெளியிடும்போதும், யு.எஃப்.ஓ சைட்டிங்ஸ் டெய்லி இணையதளம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

 

Popular Post

Tips