கருவில் இறந்த சிசுவுக்கு குழந்தை பிறந்த அதிசயம்

oru amerikkath thampathi thamathu irandaavathu kulanthaikkaaka muyarchiththu vanthanar. karppam tharikka thaamathamaakavae oru kulanthaippaeru maruththuvarin uthaviyai naadinar. anku, cheyarkai karuvuddalukkaaka kanavanen vinthanuvai chaemiththu, manaivikku cheluththappaddathu. intha muyarchiyil verriyadainthu onpathu maathankalil nalla udalnelaiyudan oru aan kulanthaiyum piranthathu. innelaiyil kulanthaiyin iraththap pirivai choathiththapoathu, kulanthai AB+ iraththap pirivudan irunthathaaka theriyavanthathu. aanaal, perror iruvarumae A- iraththap pirivai chaernthavarkal. ithaiyaduththu aetho … Continue reading "karuvil irantha chichuvukku kulanthai pirantha athichayam"
karuvil irantha chichuvukku kulanthai pirantha athichayam

ஒரு அமெரிக்கத் தம்பதி தமது இரண்டாவது குழந்தைக்காக முயற்சித்து வந்தனர். கர்ப்பம் தரிக்க தாமதமாகவே ஒரு குழந்தைப்பேறு மருத்துவரின் உதவியை நாடினர். அங்கு, செயற்கை கருவூட்டலுக்காக கணவனின் விந்தணுவை சேமித்து, மனைவிக்கு செலுத்தப்பட்டது.

இந்த முயற்சியில் வெற்றியடைந்து ஒன்பது மாதங்களில் நல்ல உடல்நிலையுடன் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் இரத்தப் பிரிவை சோதித்தபோது, குழந்தை AB+ இரத்தப் பிரிவுடன் இருந்ததாக தெரியவந்தது. ஆனால், பெற்றோர் இருவருமே A- இரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள்.

இதையடுத்து ஏதோ குளறுபடி ஏற்பட்டு விந்தணு மாறிவிட்டதாக எண்ணிய தம்பதி அந்த மருத்துவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்தத் தம்பதியின் செயற்கை கருவூட்டலுக்கு சேமிக்கப்பட்ட விந்தணு, அதே நாளில் அந்த மருத்துவரிடம் வந்திருந்த ஆப்பிரிக்க-அமெரிக்க தம்பதியினரின் விந்தணுவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

எனினும், விசாரணை முடிவில், இந்தத் தம்பதிகளின் விந்தணுக்களுக்குள் எவ்வித குளறுபடியும் நிகழவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, சமீபத்தில் அந்த தந்தையிடம் இன்னும் ஆழமான ஜீன்கள் தொடர்பான பரிசோதனை செய்தபோது, அவர் குழந்தையின் தந்தையல்ல எனவும், தந்தையின் சகோதரன் என்பதும் டி.என்.ஏ. மூலமாக உறுதியானது.

அதாவது இந்தத் தந்தை கருவாக உருவானபோது இரட்டையராக உருவாகினர் எனவும், அதில் ஒருவர் கருவிலேயே அழிந்துவிட்டதாகவும் தெரியவந்தது. ஆனால், அந்த சிதைந்துபோன குழந்தையின் டி.என்.ஏ. இவரது உடலுடன் சேர்ந்துள்ளது.

ஆகவே, இவரது பிறவாத சகோதரனுடைய குழந்தையாக இவரது மகன் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைமேரா (Chimera) என அறியப்படும் இந்தப் பிரச்சினை உலகில் வெகு சிலருக்கே ஏற்பட்டுள்ளது.

Popular Post

Tips