சோழர்களின் பெருமையை சொல்லும் கோவில்கள் – chola kingdom kovilgal

chola kingdom kovilgal kaddidak kalaiyil choalarkal mikavum kalainayam kondu thikalnthanar. puthumaikalai kaiyaala avarkal thavaravae illai. aayiram varudankalukku munpu mikavum nudpamaakavum, ariviyal chinthanaiyoadum kaddidak kalaiyil eedupaddavarkal choalarkal. ivarkal aadchik kaalaththil koavil kaddum thiruppanekal vamchaavaliyaaka thodarnthu cheythu vanthanar. kaddidak kalaiyil choalarkalai ivvalavu chirappudan eduththuk kaadda uthaaranamaaka iruppathu avarkal kaddiya perum koayilkal thaan. ithil thajchaavuril ulla pirakatheesvarar koavil, … Continue reading "choalarkalin perumaiyai chollum koavilkal – chola kingdom kovilgal"
choalarkalin perumaiyai chollum koavilkal – chola kingdom kovilgal
chola kingdom kovilgal

கட்டிடக் கலையில் சோழர்கள் மிகவும் கலைநயம் கொண்டு திகழ்ந்தனர். புதுமைகளை கையாள அவர்கள் தவறவே இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மிகவும் நுட்பமாகவும், அறிவியல் சிந்தனையோடும் கட்டிடக் கலையில் ஈடுபட்டவர்கள் சோழர்கள். இவர்கள் ஆட்சிக் காலத்தில் கோவில் கட்டும் திருப்பணிகள் வம்சாவளியாக தொடர்ந்து செய்து வந்தனர்.

கட்டிடக் கலையில் சோழர்களை இவ்வளவு சிறப்புடன் எடுத்துக் காட்ட உதாரணமாக இருப்பது அவர்கள் கட்டிய பெரும் கோயில்கள் தான். இதில் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவற்றை குறிப்பிட்டு கூறலாம்...

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் தான் கங்கைக் கொண்ட சோழபுரம். பதினொன்றாம் நூற்றாண்டின் நாடுவில் முதலாம் ராஜேந்திர சோழ பேரரசால் இவ்விடம் கட்டமைக்கப்பட்டது.

முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் தான் சோழர்களின் தலைநகராக திகழ்ந்து வந்த தஞ்சாவூருக்கு மாற்றாக, இவர் கட்டமைத்த கங்கைகொண்ட சோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டது.

இராஜேந்திர சோழனால் கங்கைக் வெற்றிக் கொண்டதன் சின்னமாக, இந்நகரம் கட்டமைக்கப்பட்டது. 1002-இல் இராஜேந்திர சோழன் இந்தியாவின் கிழக்கு கடற்கரை முழுவதுமாக வென்று இறுதியாக, கங்கையையும் வெற்றிக் கொண்டான். இதன் விளைவாகவே இவருக்கு கங்கை கொண்ட சோழன் என்ற பட்டபெயர் வந்தது.

மேலும் இந்நகரத்தின் பெருமையாக விளங்குவது இங்கு இருக்கும் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலாகும்.

தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகில் இருக்கும் தாராசுரம் என்னும் ஊரில் ஐராதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் இரண்டாம் இராஜராஜ சோழனால் 12 நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டது.

இந்த கோயிலை ஆராய்ந்த தொல்லியல் நிபுணர்கள், இக்கோயிலின் கல்வெட்டுகளில் இருந்து சோழர்கள் குறித்த பல மதிப்புள்ள தகவல்களை கைப்பற்றினர். கைப்பற்றி அதை ஆவணங்களாக மாற்றி வைத்துள்ளனர்.

கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களுக்கு இந்த கோயில் மிகவும் சிறந்து விளங்குகிறது. கலைக்கூடம், தூண்கள், தூண்களில் அமைக்கப்பட்டுள்ள அழகிய சிற்பங்கள், நாட்டிய முத்திரைகள் காட்டி நிற்கும் சிற்பங்கள், தேர் மற்றும் யானைகள், குதிரைகளால் இழுத்து செல்லும் படியான தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ராஜ கம்பீர மண்டபம் போன்றவை இந்த கோயிலின் சிறப்பு என்று கூறலாம்.

சிவபெருமான் கோயிலான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் மிகப் பெரிய கோயிலாக கருதப்படுகிறது. இதனால் தான் இந்த கோயில் தஞ்சை பெரியக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இராஜராஜ சோழனால் கட்டமைக்கப்பட பெருமை இக்கோயிலுக்கு இருக்கிறது.

தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டப்பட்ட காலமானது சோழர்களின் பொற்காலம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான தமிழக பகுதி அன்று சோழர்களின் ஆட்சிக்கு கீழ் தான் இருந்தது. மற்றும் சோழர்களின் எல்லைகள் விரிவடைந்த காலமும் அதுதான்.

எந்த அதிநவீன தொழில்நுட்பமும் இன்றி இவ்வளவு பெரிய கோயிலை வெறும் ஏழு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது என்பது உலக கட்டிட நிபுணர்களையே வாய் பிளக்க வைக்கிறது.

1010ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோயில், கடந்த 2010ஆண்டுடன் ஆயிரம் ஆண்டுகளை நிறைவு செய்தது. இது இந்த கோயிலின் மிகப்பெரிய பெருமையாகும்.

கட்டப்பட்ட முதலில் இந்த கோயில் இராஜராஜேஸ்வரம் என்றும், நாயக்கர் ஆண்ட காலத்தில் தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும் பிறகு மராட்டிய மன்னர்கள் ஆண்ட போது பிரகதீஸ்வரர் கோயில் என்றும் பெயர்கள் மாற்றி அழைக்கப்பட்டது.

 

Popular Post

Tips