நாய்க்கு துணையாக காவல் இருந்த நண்பன் நாய்

vaeli­yoonril chik­kik­konda naayoonru meed­kap­pa­dum­varai mar­roru naay 2 thinan­ka­laaka athan aru­ki­laeyae kaath­thi­runthu palarai nekilach chey­thul­lathu.  ame­rik­kaavin ad­laandaa nakaraich chaerntha atheenaa enum naayin kaal valaik­kam­pi­yoonril chik­kik­kon­dathu. antha naay athi­li­runthu vidu­pada mudi­yaamal thaviththa nelaiyil  athan nan­pa­naana reks chuyas enum naay, av­vae­likku aru­ki­laeyae nen­ru ­kon­dathu.  thanathu nanpi meed­kap­pa­dum­varai reks chuyas an­ki­runthu naka­ra­villai. iru thinan­kalin pin ad­laandaa mirukap paathu­kaappup pirivu … Continue reading "naaykku thunaiyaaka kaaval iruntha nanpan naay"
naaykku thunaiyaaka kaaval iruntha nanpan naay

வேலி­யொன்றில் சிக்­கிக்­கொண்ட நாயொன்று மீட்­கப்­ப­டும்­வரை மற்­றொரு நாய் 2 தினங்­க­ளாக அதன் அரு­கி­லேயே காத்­தி­ருந்து பலரை நெகிழச் செய்­துள்­ளது. 

அமெ­ரிக்­காவின் அட்­லாண்டா நகரைச் சேர்ந்த அதீனா எனும் நாயின் கால் வலைக்­கம்­பி­யொன்றில் சிக்­கிக்­கொண்­டது.

அந்த நாய் அதி­லி­ருந்து விடு­பட முடி­யாமல் தவித்த நிலையில்  அதன் நண்­ப­னான ரெக்ஸ் சுயஸ் எனும் நாய், அவ்­வே­லிக்கு அரு­கி­லேயே நின்­று ­கொண்­டது. 

தனது நண்பி மீட்­கப்­ப­டும்­வரை ரெக்ஸ் சுயஸ் அங்­கி­ருந்து நக­ர­வில்லை. இரு தினங்­களின் பின் அட்­லாண்டா மிருகப் பாது­காப்புப் பிரிவு அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்ட பின்னர் அதீனா மீட்­கப்­பட்­டது.

இதன்­போது, ரெக்ஸ் சுயஸ் எனும் நாயும் இரு தினங்­க­ளாக அவ்­வே­லிக்கு அரு­கி­லேயே இருந்­ததை அறிந்து தாம் வியப்­ப­டைந்­ததாக அட்­லாண்டா மிருகப் பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

பின்னர் இவ்­விரு நாய்­களும் மிருகப் பாது­காப்பு நிலை­ய­மொன்­றுக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது அதீனா எனும் நாய் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Popular Post

Tips