இணையம் மூலம் விபச்சாரம் நடத்திவந்த நடிகை கைது

kaeralaavil ´kis aap lav´ (Kiss Of Love) enra muththap poaraaddap pirachchaara amaippin nervaakikalaana kanavan – manaivi aakiya iruvarum paaliyal tholilil eedupaddathaaka kaithu cheyyappaddullanar. kaerala maanelam koalikkoaddil kadantha chila maathankalukku munnar kaapi shaap onril muththamidduk kondiruntha Kadhal jodikal meethu oru kumpal thaakkuthal nadaththiyathu. ithanaith thodarnthu kaeralaa muluvathum kallurikalil oruvarai oruvar muththamidum nekalchchikal nadaththappaddana. ´muththamiduvathu aapaachamillai´ enpathai … Continue reading "inaiyam moolam vipachchaaram nadaththivantha nadikai kaithu"
inaiyam moolam vipachchaaram nadaththivantha nadikai kaithu

கேரளாவில் ´கிஸ் ஆப் லவ்´ (Kiss Of Love) என்ற முத்தப் போராட்டப் பிரச்சார அமைப்பின் நிர்வாகிகளான கணவன் - மனைவி ஆகிய இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காபி ஷாப் ஒன்றில் முத்தமிட்டுக் கொண்டிருந்த காதல் ஜோடிகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து கேரளா முழுவதும் கல்லுரிகளில் ஒருவரை ஒருவர் முத்தமிடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

´முத்தமிடுவது ஆபாசமில்லை´ என்பதை வலியுறுத்தும் வகையில் கிஸ் ஆப் லவ் அமைப்பினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இவர்கள் இணையம் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்து வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொலிசார் நெடும்பசேரி, கொச்சி, மலப்புரம், திருச்சூர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து தீவிர சோதனை நடத்தினர்.

இதனையடுத்து இணையம் மூலம் விபச்சாரம் நடத்திவந்ததாக கிஸ் ஆப் லவ் எனப்படும் முத்தப் போராட்டப் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன், அவரது மனைவியும் பிரபல மொடலுமான ரஷ்மி ராயர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular Post

Tips