கழிவறையில் இருந்து விமானத்தில் பயணம் செய்த பின்லாந்து பிரதமர்

pinlaanthu naaddin pirathamar chila thinankalukku munnar payanekal vimaanaththil aerpadda idapparraakkurai kaaranamaaka kalivaraiyil amarnthu payanam cheythullathaaka paraparappu thakavalkal veliyaakiyullathu. pinlaanthu naaddin pirathamaraana yookaa chipilaa thanathu manaiviyudan annaaddin thalainakaraana Helsinki nakarilirunthu 606 ki,mee tholaivil ulla Oulu enra nakarukku payanamaakiyullaar. chila choolnelaikalin kaaranamaaka avar pala vimaanankalai thavara viddathaaka koorappadukirathu. pinnar, avacharakaalaththil payanpaduththappadum payanekal vimaanam onril avarum avarathu manaiviyum … Continue reading "kalivaraiyil irunthu vimaanaththil payanam cheytha pinlaanthu pirathamar"
kalivaraiyil irunthu vimaanaththil payanam cheytha pinlaanthu pirathamar

பின்லாந்து நாட்டின் பிரதமர் சில தினங்களுக்கு முன்னர் பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக கழிவறையில் அமர்ந்து பயணம் செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பின்லாந்து நாட்டின் பிரதமரான யூகா சிபிலா தனது மனைவியுடன் அந்நாட்டின் தலைநகரான Helsinki நகரிலிருந்து 606 கி,மீ தொலைவில் உள்ள Oulu என்ற நகருக்கு பயணமாகியுள்ளார்.

சில சூழ்நிலைகளின் காரணமாக அவர் பல விமானங்களை தவற விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் பயணிகள் விமானம் ஒன்றில் அவரும் அவரது மனைவியும் ஏறியுள்ளனர்.

ஆனால், விமானத்தில் ஒரே ஒரு இருக்கை மட்டும் காலியாக இருந்துள்ளது. எனவே, அந்த இருக்கையை தனது மனைவிக்கு அளித்துவிட்டு பிரதமர் கழிவறையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

அதாவது, குறிப்பிட்ட அந்த நகரை அடையும் வரை பிரதமர் கழிவறையிலேயே பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விமானத்தில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக தான் பிரதமர் கழிவறையில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்பட்டது.

எனினும், பிரதமரின் இந்த செயலுக்கு விளக்கம் கேட்டு Helsingin Sanomat என்ற பத்திரிகை பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளது.

அப்போது பேசிய அதிகாரிகள், பிரதமர் உடல்நலக்குறைவாக இருந்ததாலும், மற்ற பயணிகளுக்கு தொந்தரவு அளிக்க கூடாது என்ற காரணத்தினால் அவர் கழிவறையில் பயணம் செய்ததாக விளக்கம் அளித்துள்ளனர்.

14 நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Post

Tips