நிறைமாத கல்பிணியின் கர்ப்பப்பையை சிசுவுடன் வெட்டி எடுத்த நண்பி

amerikkaavil neraimaatha karppineyin karppappaiyai avarathu kulanthaipparuva tholiyae veddi eduththulla champavam perum athirchchiyai aerpaduththiyullathu. neyooyaark nakaril piraanks enra pakuthiyil ulla vaekpeeld aeriyaa apaardmendil, oru pen marrum kulanthaiyin alaral chaththam kaeddathaiyaduththu, mirandu poana akkampakkaththinar udanadiyaaka poalichukku thakavalaliththanar. champava idaththirku virainthu vantha poalichaar chaththam kaedda 2-vathu maadikku virainthu chenranar. appoathu, maadiyil iruntha padukkaiyarai kathavarukae, neraimaatha karppine oruvar iraththa … Continue reading "neraimaatha kalpineyin karppappaiyai chichuvudan veddi eduththa nanpi"
neraimaatha kalpineyin karppappaiyai chichuvudan veddi eduththa nanpi

அமெரிக்காவில் நிறைமாத கர்ப்பிணியின் கர்ப்பப்பையை அவரது குழந்தைப்பருவ தோழியே வெட்டி எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் என்ற பகுதியில் உள்ள வேக்பீல்ட் ஏரியா அபார்ட்மெண்டில், ஒரு பெண் மற்றும் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, மிரண்டு போன அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசுக்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சத்தம் கேட்ட 2-வது மாடிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது, மாடியில் இருந்த படுக்கையறை கதவருகே, நிறைமாத கர்ப்பிணி ஒருவர் இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகிலுள்ள ஹாலில் கொல்லப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த தொப்புள் கொடியும், குளியலறைக்கு அருகே ஒரு கத்தியும் இருந்தது. உடனடியாக விசாரணையில் இறங்கிய பொலிசார் அந்த வீட்டின் உரிமையாளரான அஷ்லீக் வேட்(22) என்ற பெண்ணைக் கைது செய்தனர்.

ஆனால், கைது செய்யப்பட்ட அஷ்லீக்கோ, அது என்னுடைய குழந்தை என்று பித்துப்பிடித்தது போல் அலறினார். பிரேத பரிசோதனை மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, கொலை செய்யப்பட்ட ஏஞ்ஜலிக் சுட்டன், 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவரது குழந்தைப் பருவ தோழியான அஷ்லீக் வேட் அண்மைக்காலமாக அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்துடன், தான் கர்ப்பமாக இருப்பதாக பாசாங்கு செய்து, அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கில் தன் வயிற்றில் குழந்தை இருப்பதைப் போன்ற புகைப்படத்தையும் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதை பெயர் தெரியாத அஷ்லீக்கின் ஆண் நண்பரும் ஷேர் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தன் வீட்டிற்கு கர்ப்பிணியான ஏஞ்ஜலிக்கை அழைத்து வந்து, அவரது மிகக் கொடூரமான முறையில் 22 முறை கத்தியால் குத்தி ஏஞ்ஜலிக்கின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த கொடூரத்தால் பிறந்த குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஜெனசிஸ் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை தற்போது குழந்தைகள் காப்பகத்தில் உள்ளது. அஷ்லீக்கை மனநல பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, பொலிசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
 

Popular Post

Tips