ஆபிஸுல உட்கார்ந்து பேஸ்புக் பார்த்தா தப்பா?

  pane naeraththil chamooka valaiththalaththai payanpaduththuvathu thankalathu urimai ena ooliyarkal theriviththullathaaka aayvu therivikkirathu. naalukku naal paespuk, duviddar ullidda chamooka valaiththalankalai payanpaduththuvoo ennekkai athikariththu varukirathu.    athae chamayaththil, aluvalakaththil pane naeraththil chamooka valaiththalankalai payanpaduththuvathum athikariththullathu. appadi aluvalaka naeraththil chamooka valaiththalankalai payanpaduththupavarkal athai thankal urimai enrae karuthukiraarkal. amerikkaavilum, kanadaavilum palvaeru neruvanankalil paneyaarri varum aayiraththukkum maerpadda ooliyarkalidam nadaththappadda … Continue reading "aapisula udkaarnthu paespuk paarththaa thappaa?"
aapisula udkaarnthu paespuk paarththaa thappaa?

 

பணி நேரத்தில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவது தங்களது உரிமை என ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. நாளுக்கு நாள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 
அதே சமயத்தில், அலுவலகத்தில் பணி நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. அப்படி அலுவலக நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் அதை தங்கள் உரிமை என்றே கருதுகிறார்கள். அமெரிக்காவிலும், கனடாவிலும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாம். 
 
மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், அலுவலகத்தில் தினமும் ஒரு மணி நேரமோ அல்லது அதற்கும் மேலோ சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதாக தெரிய வந்துள்ளது. அதிலும் ‘பணி நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை எந்த நிறுவனமாவது தடை செய்தால், அந்த நிறுவனத்தில் நாங்கள் பணியாற்றவே மாட்டோம்‘ என்றும் 25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனராம்.

Popular Post

Tips