உடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்காக..

  amerikka kampene onru 100 naadkal thuvaikkaamal, ayarn cheyyaamal poadak koodiya chaddai onrai kandupidiththullanar.    innaikku lukkaa irukkum chaddai, naalaikku alukkaaka irukkum ena nakaichchuvaiyaaka kooruvaarkal. aanaal 100 naadkal varai anenthaalum alukkaakaatha chaddai irukkirathenraal aachcharyamaakath thaanae irukkum.    athilum nammil perumpaalaanavarkalukku thuvaippathu oru kashdam enraal, athai ayadrn cheyvathu athai vidak kashdam. pala naadkal thuvaikkaatha jenssai paarththirukkirom. … Continue reading "uduppu thoyppatharku kallamadippavaraa neenkal? itho unkalukkaaka.."
uduppu thoyppatharku kallamadippavaraa neenkal? itho unkalukkaaka..

 

அமெரிக்க கம்பெனி ஒன்று 100 நாட்கள் துவைக்காமல், அயர்ன் செய்யாமல் போடக் கூடிய சட்டை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 
 
இன்னைக்கு லுக்கா இருக்கும் சட்டை, நாளைக்கு அழுக்காக இருக்கும் என நகைச்சுவையாக கூறுவார்கள். ஆனால் 100 நாட்கள் வரை அணிந்தாலும் அழுக்காகாத சட்டை இருக்கிறதென்றால் ஆச்சர்யமாகத் தானே இருக்கும். 
 
அதிலும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு துவைப்பது ஒரு கஷ்டம் என்றால், அதை அயட்ர்ன் செய்வது அதை விடக் கஷ்டம். பல நாட்கள் துவைக்காத ஜீன்ஸ்ஸை பார்த்திருக்கிறோம். அதுபோல் சட்டையும் கிடைத்தால் டபுள் சந்தோஷம் தானே….
 
சட்டைத் தயாரிப்பாளர்கள் சுருங்காத, வியர்வை படியாத சட்டை என இப்புதிய வரவு சட்டைக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
 
கடினமான உடற்பயிற்சிக்குப் பிறகு கூட அச்சட்டை பளிச்சென, நறுமணத்தோடு இருக்குமாம்.
 
நவ நாகரீக இளைஞர்களுக்கான புதிய மாடல் சட்டையை தயாரிக்கும் முயற்சியில் உருவானது தான் இளநீலம் மற்றும் கருநீலம் கலந்த கட்டம் போட்ட இச்சட்டை என தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது.
 
கசங்கல்,சுருக்கம், அழுக்கு இல்லாமல் பல நாட்களுக்கு இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
 
சட்டையை சோதிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சட்டையைப் பற்றி கூறும் போது, ‘சட்டை எப்போதும் ட்ரைகிளீனரில் இருந்து எடுக்கப்பட்டது போல் புத்துணர்ச்சியோடு இருக்கிறது' என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

 

Popular Post

Tips