திருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்

  thiruppathi laddai oru kaalaththil ‘manookaram’ enru alaiththaarkal. thinamum uththaechamaaka  6aayiram kiloa kadalai maavu, 12 aayiram kiloa charkkarai, 750 kiloa munthiri paruppu, 200 kiloa aelakkaay, 500liddar ney, 30 kiloa enney, 500 kiloa karkandu, 600 kiloa ularntha munthiri marrum 50 kiloa paathaam paruppu aakiyavai payanpaduththappadukinrana.   intha poarudkalukku maddum uththaechamaaka roo.12 ladcham chelavaakum. oru laddu charaachariyaaka … Continue reading "thiruppathi laddu – unkalukku theriyaatha chila thakavalkal"
thiruppathi laddu – unkalukku theriyaatha chila thakavalkal

 

திருப்பதி லட்டை ஒரு காலத்தில் ‘மனோகரம்’ என்று அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக  6ஆயிரம் கிலோ கடலை மாவு, 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி பருப்பு, 200 கிலோ ஏலக்காய், 500லிட்டர் நெய், 30 கிலோ எண்ணெய், 500 கிலோ கற்கண்டு, 600 கிலோ உலர்ந்த முந்திரி மற்றும் 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
 
இந்த பொருட்களுக்கு மட்டும் உத்தேசமாக ரூ.12 லட்சம் செலவாகும். ஒரு லட்டு சராசரியாக  ரூ.10க்கு விற்கப்படுகிறது. வி.ஐ.பி.களுக்கு கூடுதல் விலையில் லட்டு விற்கப்படுகின்றன.
 
கடந்த 2006ம் ஆண்டில் லட்டு விற்பனை மூலம் 75 கோடியும், 2007ல் 103 கோடியும், 2009ல் 125 கோடியும் வருமானமாக கிடைத்தது. கோயிலுக்குள் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிராசதமாக தரப்படும் லட்டு 100 கிராம் எடையுடையது.
  
இதை கோயிலுக்குள் உள்ள ‘பொடு’ என அழைக்கப்படும் மடப்பள்ளியிலேயேபாரம்பரியமாக அர்ச்சகர்கள் தயாரித்து வருகின்றனர். கடந்த 300 ஆண்டுகளாக இந்த பணி நடப்பதாக கூறப்படுகிறது. இந்த லட்டை ‘கல்யாண லட்டு’ என்றும் சொல்வார்கள்.
 
இது அரைக் கிலோ எடைகொண்டது. லட்டு தயாரிப்பு பொருட்களும், தயாரிக்கப்பட்ட லட்டுகளும் கிரேன் மூலமாக வினியோக இடத்திற்கு எடுத்துச்செல்லப் படுகிறது. லட்டு தயாரிப்புக்குரிய வாசனைப் பொருட்கள் கொச்சியில் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற பொருட்கள் ஏல முறையில் வாங்கப்படுகிறது.

Popular Post

Tips